பிரபல தாதாவை மயக்குவதற்காக உளவுத்துறையால் அனுப்பப்பட்ட அழகிய இளம்பெண்ணுக்கு வந்த காதல்: சினிமாவை மிஞ்சிய ஒரு உண்மை சம்பவம்
ரஷ்ய இராணுவத்தில் இணைந்த ஒரு அழகிய இளம்பெண் உளவாளியாக பயிற்சி பெற்ற நிலையில், பிரபல கேங் ஒன்றின் தலைவனை மயக்கி அவனிடமிருந்து இரகசிய தகவல்களை சேகரிப்பதற்காக அனுப்பப்பட்டார்.
ஆனால், Aliia Roza (19) என்ற அந்த பெண், யாரை மயக்க இராணுவத்தால் அனுப்பப்பட்டாரோ அந்த கேங் தலைவனுடனேயே காதலில் விழுந்துவிட்டார். ஆம், Vladimir என்ற அந்த கேங் தலைவனை உண்மையாகவே காதலிக்கத் தொடங்கிவிட்டார் Aliia.
ஆனால், Vladimirஇன் கூட்டத்திலிருந்த சிலர் Aliia ஒரு இராணுவ வீராங்கனை, உளவு பார்க்க வந்திருக்கிறார் என்பதைக் கண்டு பிடித்துவிட்டார்கள்.
இருள் நிறைந்த ஒரு காட்டுக்கு Aliiaவை அழைத்துச் சென்று, 10 பேர் அவரை கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். அப்போதும் Vladimirதான் அவரை காப்பாற்றியிருக்கிறார். பிறகு, கேங் உறுப்பினர்கள் சிலர் Vladimirஐக் கொலை செய்திருக்கிறார்கள்.
ஆக, Vladimirஇன் கூட்டம் Aliia ஒரு இராணுவ வீராங்கனை என்பதைக் கண்டுபிடித்ததுபோலவே, இராணுவமும் Aliia, Vladimirஐ காதலிப்பதை தெரிந்துகொள்ள இருதலைக் கொள்ளி எறும்பாக வசமாக சிக்கிக்கொண்டுள்ளார் அவர்.
ஆனால், இறப்பதற்கு முன், Vladimir சிலரது முகவரிகளை Aliiaவிடம் கொடுத்து, அவர்களை சென்று பார்க்கும்படி கூறியிருக்கிறார். அதன்படி அவர்களை சந்தித்து, பிறகு காலப்போக்கில், சுவிட்சர்லாந்து, பிரித்தானியா, அமெரிக்கா என பல நாடுகள் சுற்றி, ஃபேஷன் நிறுவனம் ஒன்றை சொந்தமாக துவங்கி, இன்று இளவரசர் சார்லஸுக்கு அருகில் நிற்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார் Aliia.
என்றாலும், அவரால் தன் தாய்நாடான ரஷ்யாவுக்கு மட்டும் செல்லமுடியாது. எனவே தன் பெற்றோரை சந்திக்கவேண்டுமானால், கொஞ்சம் பயத்துடனேயே வெளிநாடுகளில் ஏதாவது ஒன்றில் அவர்களை சந்தித்துக்கொள்கிறார் Aliia.
இப்போது 36 வயதாகும் Aliia, தனது இளமைக்காலம் குறித்து நினைவுகூரும்போது, தான் இராணுவத்தில் சேர்ந்த சில நாட்களிலேயே தனது சக இராணுவ வீரர்கள் தன்னை வன்புணர்ந்துவிட்டதாகவும், தான் யாரிடமும் அது குறித்து கூறவில்லை என்றும் கூறுகிறார். பொலிசார் வன்புணர்ந்துவிட்டார்கள் என பொலிசாரிடமே புகாரளிக்க முடியுமா என்று கேட்கும் Aliia, தான் காதலித்த Vladimirஇடம் மட்டுமே அந்த உண்மையைக் கூறியதாக தெரிவிக்கிறார்.
ரஷ்யாவைப் பொருத்தவரை, பொலிசாரை விட கிரிமினல்கள் எவ்வளவோ மேல் என்று கூறும் Aliia, பொலிசாருக்கு கொள்கைகள் என்று எதுவுமே கிடையாது. ஆனால், கிரிமினல்களோ கொள்கைகளை பின்பற்றுகிறார்கள், தங்கள் குடும்பத்தினரை, குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கிறார்கள் என்கிறார்.