ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் புதிய Realme P3 Ultra ஸ்மார்ட்போன்
தொழில்நுட்ப நிறுவனமான RealMe மார்ச் 19-ஆம் திகதி பட்ஜெட் பிரிவில் Realme P3 Ultra என்ற புதிய 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போன் 80W சார்ஜிங் ஆதரவுடன் 6000mAh பேட்டரி மற்றும் 50 மெகாபிக்சல் Sony IMX896 OIS கமெராவுடன் வரும் என கூறப்படுகிறது.
இதில் MediaTek Dimensity 8350 சிப்செட் இருக்கும் என நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும்,இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வரவுள்ளது.
Realme P3 Ultra 8GB + 128GB, 8GB + 256GB மற்றும் 12GB + 256GB ஆகிய மூன்று storage வகைகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.25,000 பட்ஜெட் விலை செக்மண்டில் இருக்கும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |