10,000mAh பேட்டரியுடன் Realme P4 Power இந்தியாவில் அறிமுகம்
Smart Phones
India
Realme
By Ragavan
ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய அதிரடி முயற்சியாக, Realme நிறுவனம் தனது புதிய P4 Power மாடலை இந்தியாவில் ஜனவரி 29 அன்று அறிமுகப்படுத்துகிறது.
இந்த மொபைலின் முக்கிய அம்சம் 10,001mAh Titan Battery, இது உலகளவில் வணிக உற்பத்தியில் முதன்முறையாக அறிமுகமாகிறது.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 32.5 மணி நேர வீடியோ ஸ்ட்ரீமிங் செய்ய முடியும்.
அதேசமயம், பேட்டரி பாதுகாப்பு மற்றும் நீண்ட ஆயுள் தொழில்நுட்பங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

வடிவமைப்பு
- இந்த ஸ்மார்ட்போன் TransView Design-ல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- TransOrange, TransSilver, TransBlue ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
- இதன் எடை சுமார் 219 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப அம்சங்கள்
- இதில் 6.78-இஞ்ச் AMOLED curved Display, 144Hz refresh rate-உடன் கொடுக்கப்பட்டுள்ளது.
- மேலும், MediaTek Dimensity 7400 Ultra processor + HyperVision+ AI chip ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
- Camera-வை பொறுத்தவரை, பின்புறம் 50MP OIS primary, 8MP ultra-wide மற்றும் auxiliary sensor உள்ளது. முன்புறம் 16MP selfie camera கொடுக்கப்பட்டுள்ளது.
- Android 16 அடிப்படையிலான Realme UI 7.0, IP68/IP69 dust and water resistance உள்ளது.
விலை
12GB RAM + 256GB storage மாடலின் பாக்ஸ் விலை ரூ.37,999 எனக் கூறப்படுகிறது, ஆனால் இறுதி விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US