ஆசியக் கிண்ணத்திலிருந்து பாகிஸ்தான் ஏன் வெளியேறவில்லை?
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து விலகுவதாக அச்சுறுத்தி, பின்னர் விளையாடியதன் காரணம் தெரிய வந்துள்ளது.
வருவாய் இழப்பு அபாயம்
இந்திய அணி வீரர்களுடனான கைகுலுக்கல் சர்ச்சையால், பாகிஸ்தான் அணி நடப்பு ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து விலகுவதாக அச்சுறுத்தியது.
ஆனால், அடுத்தப் போட்டியில் பாகிஸ்தான் விளையாடியது. இதற்கு காரணம் வருவாய் இழப்பு அபாயம்தான்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அதிகாரிகளின் ஆதரவுடன் புறக்கணிப்பு முடிவை கைவிட்டு, தொடரில் அணியின் தொடர்ச்சியான பங்கேற்பை உறுதி செய்தார்.
இல்லையேல் பாகிஸ்தான் மிகப்பெரிய நிதி இழப்பை சந்தித்திருக்கும். அதாவது, ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து விலகுவது பாகிஸ்தானுக்கு ஒளிபரப்பு மற்றும் ஸ்பான்ஸர்ஷிப் வருவாயில் 12-16 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்திருக்கும்.
இது அவர்களின் 15 சதவீத ACC வருவாய் பங்கை பாதித்திருக்கும். மேலும் ஒளிபரப்பாளர் இழப்பீட்டு கோரிக்கைகளையும் ஆபத்தில் ஆழ்த்தியிருக்கும்.
ஒப்பந்தத்தை ஆபத்தில்
இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியைக் காணவே மிகப்பெரிய அளவில் பார்வையாளர்கள் உள்ளதால், அடுத்தடுத்த போட்டிகளில் இருந்தும் கிடைக்கக்கூடிய பாரிய வருவாய் இழப்பையும் பாகிஸ்தான் சந்தித்திருக்கும்.
அதேபோல் சோனி நெட்வொர்க் இந்தியா - ACC ஒப்பந்தம் 2031ஆம் ஆண்டுவரை செய்யப்பட்டுள்ளது. இதில் ஆடவர், மகளிர் மற்றும் U-19 ஆசியக் கிண்ணப் போட்டிகளும் அடங்கும்.
எனவே பாகிஸ்தானின் விலகல் முடிவானது இந்த ஒப்பந்தத்தையும் ஆபத்தில் ஆழ்த்தியிருக்கும். அத்துடன் உலகளவில் ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்ஸர்களையும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கும்.
ஒருவேளை பாகிஸ்தான் வெளியேறியிருந்தால், ஒளிபரப்பாளர் இழப்புகளுக்கு நிதி இழப்பீடு கோரியிருக்கலாம்.
PCBயின் ஆண்டு பட்ஜெட் 227 மில்லியன் அமெரிக்க டொலர்களை கிட்டத்தட்ட 7 சதவீதம் வரை குறைத்திருக்கலாம். இதனால் வருவாய் இழப்பு மட்டுமின்றி நம்பகத்தன்மை இழப்பு ஏற்பட்டிருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |