விஜய்யை சீமானை எதிர்ப்பது ஏன்? வியூகம் மாறிவிட்டதா? காணொளி
நாம் தமிழர் சீமான் திமுக விட தவெக தலைவர் விஜய்யை அவர் எதிர்ப்பது ஏன் என்ற கேள்விக்கு, அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பதிலளித்துள்ளார்.
அவர், திராவிட கட்சிகளின் தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, எம்ஜிஆர், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஸ்டாலின் இந்த ஐந்து பேரும்தான் தமிழ்நாட்டின் அனைத்து கேடுகளுக்கும் காரணம் எனக் கூறி சீமான் எதிர்க்கிறார்.
சீமான் 70 சதவீதம் வாக்குவங்கியை இலக்கு வைத்து நிற்கிறார். திமுகவும், அதிமுகவும் காங்கிரஸ், பாஜகவுக்கு ஒட்டுண்ணிகள் என்றும் அடித்து பேசுகிறார்.
இதுதான் சீமானின் நிலைப்பாடு என்றார். விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரவீந்திரன் துரைசாமி, அவருக்கு (விஜய்) அபிமானம்தான் இருக்கிறது; ஓட்டு ஆகவில்லை.
அவரை அடிக்கும்போது ரஜினி, அஜித், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோரின் ரசிகர்களின் வாக்குகள் கிடைக்கலாம் என்று கணிப்பு இருக்கலாம்.
மேலும் விஜய்யை தாக்கி பேசும்போது இவன்தான் ஹீரோ, துணிந்து கேள்வி கேட்கிறான் என்கிற எண்ணமும் மக்களுக்கு ஏற்படும் என கூறுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |