இந்தியாவில் தொலைபேசி எண்கள் +91 இல் தொடங்குவதன் காரணம் என்ன?
இந்தியாவில் 140 கோடி மக்கள் தொகை உள்ள நிலையில், 120 கோடி மொபைல்போன் இணைப்பும், 2 கோடிக்கு அதிகமான லேண்ட்லைன் இணைப்பும் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள தொலைபேசி எண்களை அழைக்கும் போது அதன் முன்னர் +91 என்ற எண் தோன்றும். இதற்கான காரணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
+91 இல் தொடங்கும் இந்திய தொலைபேசி எண்கள்
இந்த +91 என்பது இந்தியாவின் சர்வதேச அழைப்பு குறியீடு ஆகும்.
இதே போல், வெளிநாட்டு எண்களை அழைக்கும் போது, 10 இலக்க தொலைபேசி எண்களுக்கு முன்னர் வேறு எண்கள் தோன்றும்.
அமெரிக்கா எண்ணிற்கு அழைக்கும் போது, +1 எனவும், பிரித்தானியா எண்ணிற்கு அழைக்கும் போது +44 எனவும் தோன்றும்.
ஐநா சபையின் கீழ் இயங்கும் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம்(ITU), இந்த அழைப்பு குறியீட்டு எண்களை வழங்குகிறது. உலகளவில், தகவல் தொடர்பு தொழில்நுட்ப விடயங்களை இந்த நிறுவனம் கட்டுப்படுத்துகிறது.
சர்வதேச அழைப்புகள் சரியான நபருக்கு செல்ல, உலக நாடுகளை 9 மண்டலங்களாக பிரித்துள்ளது.
இதில், இந்தியா 9வது மண்டலத்தில் வருகிறது. 9வது மண்டலத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உட்பட 14 நாடுகள் உள்ளன.
இதன் காரணமாக, இந்தியாவின் தொலைபேசி எண்களுக்கு முன்னர் 91 என்ற எண் தோன்றுகிறது.
இதே போல், ஆப்கானிஸ்தானுக்கு 92, பாகிஸ்தானுக்கு 93, இலங்கைக்கு 94 என்ற அழைப்பு குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச அழைப்பு குறியீடு தொலைபேசி எண்களுக்கு, ஒரு முகவரி போன்று செயல்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |