ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கு இது தான் காரணம்! வெளிவந்த உண்மை
ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கு மத்திய அரசு கூறியிருந்த நிலையில், தற்போது சிலரது முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
ஆதாரை இணைக்க வேண்டும்
ஆதார் கார்டும், ரேஷன் கார்டும் தனி மனிதனின் அடையாளமாக மாறிவிட்டது. அரசு வழங்கும் நலத்திட்டங்களை பெறுவதற்கு கூட ஆதார் கார்டு அவசியமாகியுள்ளது.
மேலும், சிம் கார்டு மற்றும் பான் கார்டுடன் ஆதார் கார்டை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், பல மோசடிகளை கண்டுபிடித்து தவிர்ப்பதற்கு தான். மேலும், ஒருவருக்கு வழங்கப்படும் பலன்களை, மற்றொருவர் பயன்படுத்திடக் கூடாது என்பதற்காகவும் கூறியுள்ளது.
அதாவது, நியாய விலை கடைகளில் குடும்ப உறுப்பினர் கைரேகை இருந்தால் மட்டுமே, அவர்கள் அந்த பலன்களை வாங்க முடியும். அதற்கு, ஆதாரும் முக்கிய பங்கு வகிப்பதால் பல மோசடிகள் தடுக்கப்படுகின்றன.
ரேஷன் கார்டு ரத்து
ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டு இணைக்கப்பட்டதால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதாவது, வேறொரு மாநிலத்தின் வசிப்பிட சான்றிதழை தானாகவே உருவாக்கி அதன் மூலம் ரேஷன் கார்டு பெற்று பொருள்களை வாங்கி வந்துள்ளனர். இப்படி வாங்கியுள்ள 9,500 பேரின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய மாநிலம் உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 9,500 பேரின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கார்டை ஆதாருடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று கூறிய பின்பு தான் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பகாஹா-1ல் 1012 பேருக்கும், பகாஹா-IIல் 1509 பேருக்கும், மதுபானியில் 2644 பேருக்கும், பிதாவில் 2750 பேருக்கும், ராம்நகரில் 392 பேருக்கும், பிப்ராசியில் 1313 பேருக்கும், தக்ராஹானில் 5561 பேருக்கும் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |