றமழான் 2024: நோன்பு திறக்கும் போது பேரீச்சம் பழம் சாப்பிடுவது ஏன் தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களின் 9வது மாதத்தில் றமழான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த பண்டிகையானது அடுத்த மாதம் வரவிருப்பதால், அதற்கு முதல் உள்ள ஒரு மாத காலத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம்.
இந்த நோன்பு காலமானது இஸ்லாமியர்களின் மத்தியில் முக்கியமான காலமாகும். இந்த காலத்தில் ஒரு மாதம் சூரிய உதயத்திற்கு முன்பே சாப்பிட்டு நோன்பில் ஈடுபடுகிறார்கள், சூரியன் மறைந்ததும் நோன்பை நிறைவு செய்வார்கள்.
இவ்வாறு ஒரு மாதம் காலம் வரையில் கடைப்பிடித்து வருவார்கள். மாலை நேரத்தில் இஃப்தாரின் போது கண்டிப்பாக பேரீச்சம் பழத்தை எடுத்துக்கொள்வார்கள்.
நோன்பு கடைப்படிக்கும் போது உணவை முற்றிலும் தடுத்து வைப்பது அவர்களின் ஆன்மாவை பக்தியில் ஆழ்த்துவதற்காக மட்டுமே. ரமலான் மாதத்தில் 125 முறை தொழுகை நடத்த வேண்டும். இந்த காலத்தில் மது மாது சூது ஆகியவற்றில் இருந்து விளகியிருக்கவும் வேண்டும்.
இதை சாப்பிட்ட பிறகு தான் மற்றைய உணவுகளை உட்கொள்வார்கள் எனலாம். அந்தவகையில் நோன்பு திறக்கும் போது பேரீச்சம் பழம் சாப்பிடுவது ஏன் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பேரீச்சம் பழம் சாப்பிடுவது ஏன்
இஸ்லாமியர்களின் மத நம்பிக்கைப்படி, பேரீச்சம் பழம் சாப்பிட்டு நோன்பு திறப்பது சுன்னாவாக கூறப்படுகிறது.
ஹஸ்ரத் முகமது பேரீச்சம் பழங்களை விரும்பி சாப்பிடுவார் என்றும், இதை சாப்பிட்ட பிறகு தான் நோன்பு திறப்பார் எனவும் கூறப்படுகிறது.
ஹஸ்ரத் முகம்மது நபியின் வழியை பின்பற்றுவது தான் சுன்னா என்று அழைக்கப்படுகிறது.
எனவே தான் இஸ்லாமியர்ககள் பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு நோன்பு திறப்பை வழக்கமாக வைத்துள்ளனர்.
பேரீச்சம் பழம் பற்றி திருக்குரானில் 20 க்கும் அதிகமான முறை குறிப்பிடப்பட்டுள்ளது.