சீமானின் மகன்கள் ஆங்கில வழியில் கல்வி கற்பதற்கு என்ன காரணம்? அவர் சொன்ன விளக்கம்
எனது மகன்கள் ஆங்கில வழியில் கல்வி கற்பது இதனால் தான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்தார்.
ஆனால், கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. பின்னர், நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.
இதனைத்தொடர்ந்து, மைக் சின்னத்திற்கு பதிலாக படகு அல்லது பாய்மர படகு சின்னத்தை ஒதுக்கி தரும்படி நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம் ஏற்கனவே ஒதுக்கியுள்ள 'மைக்' சின்னத்தை உறுதி செய்தது.
இந்நிலையில் நேற்று, மைக் சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று சீமான் அறிவித்தார்.
மகன்களுக்கு ஆங்கில வழியில் கல்வி
அப்போது, விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நாதக வேட்பாளர் கௌசிக், வேட்பு மனுதாக்கலின்போது தமிழ் படிக்கத் தெரியாமல் இருந்தது குறித்து சீமானிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "என் பிள்ளைக்கு தமிழர் தெரியவில்லை என்று சொல்வது எனக்கு அவமானமில்லை. வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்கிற வெற்று முழக்கத்தை முன்வைத்து எங்களை வீழ வைத்தவர்கள்தான் அவமானப்பட வேண்டும்.
என் மகன்கள் இருவரும் கூட ஆங்கில கல்வி வழியில் தான் படிக்கிறார்கள். அதற்கு நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகள் இல்லை" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |