மதுரோவின் பெட்ரோல் அரசியல் முதல் ஈழம் வரை - திரைமறைவில் நடந்த திடுக்கிடும் நிகழ்வுகள்
மதுரோவின் பெட்ரோல் அரசியல் முதல் ஈழம் வரை திரைமறைவில் நடந்த திடுக்கிடும் நிகழ்வுகள் குறித்து அதிர்வுகள் நிகழ்ச்சியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
மதுரோவின் பெட்ரோல் அரசியல் முதல் ஈழம் வரை
சமீபத்தில், வெனிசுலாவில் தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம், அந்த நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து அமெரிக்காவிற்கு கொண்டு சென்று சிறையில் அடைந்துள்ளது.

ஒரு நாட்டிற்குள் புகுந்து அந்த நாட்டின் ஜனாதிபதியை கைது செய்து நாடு கடத்திய சம்பவத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
மதுரோ போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறி வந்தாலும், வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை ஆக்கிரமிக்கவே அமெரிக்கா இந்த படையெடுப்பை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதே போல், ஈராக்கில் பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்பதாக கூறி அந்த நாட்டின் ஜனாதிபதி சாதம் உசேனை கைது செய்து அமெரிக்கா ராணுவம் தூக்கிலிட்டது. ஆனால் அதன் பின்னர் ஈராக்கில் அத்தகைய ஆயுதங்கள் இல்லை என்பது தெரிய வந்தது.

இதே போல், வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடாபியின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி தூண்டி விடப்பட்டு, ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கிளர்ச்சியாளர்களுக்கு சகல உதவிகளையும் வழங்கியது.

Credit : getty images
41 ஆண்டுகளாக அந்த லிபியாவின் தலைவராக இருந்த கடாபியின் ஆட்சி 2011 ஆம் ஆண்டில் கவிழ்க்கப்பட்டு, அவர் கொல்லப்பட்டார்.
Credit : Evan Vucci/AP Photo
இதேபோல், இலங்கையில் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பும், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவியுடன் அழித்தொழிக்கப்பட்டது.
மதுரோவின் கைது, சாதம் ஹுசைன், கடாபி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகியோரை அழித்தொழிப்பதன் மூலம் அமெரிக்கா அடைய நினைத்தது என்ன?, விடுதலைப் புலிகள் உருவாக்கிய தமிழீழ வைப்பகம் அமெரிக்காவின் கண்ணை உறுத்தியது ஏன்? இதில் பிரித்தானியாவின் அரச குடும்பத்திற்கே கடன் வழங்கிய, இஸ்ரேல் உருவாக காரணமாக இருந்த ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தின் பங்கு என்ன? என இன்றைய அதிர்வு நிகழ்ச்சியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவைக் காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |