பிரித்தானிய வரலாற்றிலேயே அதிக வெப்பநிலை காலம்! 50 ஆண்டுகால மைல்கல் கடந்தது
பிரித்தானியாவின் வரலாற்றிலேயே மிகவும் அதிக வெப்பநிலை கொண்ட காலமாக பதிவாகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
50 ஆண்டுகளுக்கு முன்பு
1976ஆம் ஆண்டு பிரித்தானியாவின் வரலாற்றிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க கோடைக்காலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
அந்த ஆண்டில், அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பு 14 நாட்கள் தொடர்ச்சியாக 30 டிகிரி செல்சியஸுக்கும் மேல் இருந்தது.
ஆனால், தற்போது 15 நாட்களைக் கடந்து 50 ஆண்டுகால மைல்கல்லை பிரித்தானியா தாண்டியள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
the University of Reading-யின் வானியல் ஆய்வு மையம் 1908ஆம் ஆண்டு முதல் வெப்பநிலை குறித்த தரவுகளை பதிவு செய்து வருகிறது.
முக்கியமான விடயத்தை நமக்கு உணர்த்துகிறது
இதுகுறித்து The University of Reading-ஐ சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ சார்ல்டன்-பெரெஸ் கூறுகையில், "அரை நூற்றாண்டு காலமாக, ஒவ்வொரு வெப்பமான கோடைக்காலத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான அளவுகோலாக 1976ஆம் ஆண்டு விளங்கியது. இப்போது அந்த இடத்தை 2026ஆம் ஆண்டு பிடித்துள்ளது.
1976யில் பதிவான 14 நாட்களை முறியடித்து, இந்த ஆண்டில் இதுவரை 30 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பம் நிலவிய 15 நாட்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம்; மேலும் கோடைக்காலம் முடிவடைய இன்னும் ஆறு வாரங்கள் உள்ளன. இது ஒரு முக்கியமான விடயத்தை நமக்கு உணர்த்துகிறது" என்றார்.
இந்த வாரமும் வெப்பமான வானிலை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், அடுத்த சில நாட்களில் புதிய உச்சபட்ச சாதனை ஒன்று பதிவாக வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றன.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |