விடாத மழை... ஐரோப்பிய நாட்டில் மீண்டும் சிவப்பு எச்சரிக்கை: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
ஸ்பெயின் நாட்டில் மலாகா மாகாணத்தில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திடீரென்று சிவப்பு எச்சரிக்கை
தற்போது Costa del Sol என்ற பகுதியில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் விடாத மழையால் பெருவெள்ளம் மீண்டும் ஏற்படக் கூடும் என தெரிவித்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களை மக்கள் வாங்கத் தொடங்கியுள்ளனர். மணல் மூட்டைகளை வீட்டு வாசலில் பாதுகாப்புக்கு என குவித்துள்ளனர்.
மலாகா மாகாணத்தில் பல வணிக வளாகங்களில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த பகுதிகளில் திடீரென்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பொதுமக்களுக்கு அவர்களின் அலைபேசிகளில் எச்சரிக்கை குறுந்தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கணிப்பின் படியே கன மழை பெய்யக் கூடும் என்றால், 300,000 மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றே கருதப்படுகிறது.
200 பேர்களுக்கும் அதிகமானோர்
மாகாணத்தில் மொத்தமாக பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, Guadalhorce ஆற்றின் அருகே குடியிருக்கும் சுமார் 1000 வீடுகளில் 3000 மக்களை வெளியேற்றியுள்ளனர்.
மிக சமீபத்தில் கிழக்கு கடற்கரை நகரமான வலென்சியாவில் ஏற்பட்ட கன மழை மற்றும் பெருவெள்ளத்தால் 200 பேர்களுக்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |