ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன?
ஹமாஸ் பிடியிலிருந்த 20 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஹமாஸிடமிருக்கும் இஸ்ரேல் பிணைக்கைதிகளின் உடல்களில் நான்கு மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு
These are the 4 hostages who were murdered and who will be returned to Israel from Gaza
— Documenting Israel (@DocumentIsrael) October 13, 2025
Yossi Sharabi, Bipin Joshi, Daniel Peretz, and Guy Iluz
May their memories be for a blessing pic.twitter.com/YkaDqRpXXu
இஸ்ரேலில் ஒரு பக்கம் விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துள்ள அதே நேரத்தில், ஹமாஸ் பிடியில் கொல்லப்பட்ட மற்றும் உயிரிழந்த 28 பிணைக்கைதிகளின் உடல்கள் அனைத்தும் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை.
ஹமாஸிடமிருக்கும் இஸ்ரேல் பிணைக்கைதிகளின் உடல்களில் நான்கு மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அதுவும் சற்றுமுன்தான் அந்த உடல்களை அடையாளம் காணும் முடிவடைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள 20 உடல்கள் நிலை என்ன என்பது தெரியவில்லை.
இதற்கிடையில், அந்த உடல்களை ஒப்படைப்பது தாமதமாகலாம் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
காசா நகரின் இடிபாடுகளுக்கிடையில் அவர்களுடைய உடல்களைக் கண்டுபிடிப்பது பெரும் சவால் என்றும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
அது குறித்து தகவல் தெரிவித்துள்ள செஞ்சிலுவைச் சங்க செய்தித்தொடர்பாளரான Christian Cardon, மீதமுள்ள பிணைக்கைதிகளின் உடல்களைக் கண்டுபிடிக்க பல நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம் என்றும், சில உடல்கள் கிடைக்காமலே போகக் கூட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அடையாளம் காணப்பட்டுள்ள உடல்களில் ஒன்று நேபாள மாணவரான Bipin Joshi (23) என்பவருடையது என்றும், அவர் ஹமாஸ் அமைப்பால் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மற்றொரு உடல், Guy Ilouz (26) என்னும் இஸ்ரேல் குடிமகனுடையது. அவர் காயங்களுடன் ஹமாஸ் பிடியில் இருந்த நிலையில், சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |