ஐரோப்பாவை விட்டு வெளியேறி மீண்டும் நாடு திரும்பும் ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள்!
உக்ரேனியர்கள் ஐரோப்பாவை விட்டு வெளியேறி தற்போது மீண்டும் நாடு திரும்பி வருவதாக அமெரிக்க ஊடகமான NBC நியூஸ் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படையெடுக்க தொடங்கிய பிப்ரவரி 24ம் திகதி முதல் சுமார் 4 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர்.
உக்ரைன் மீது தொடர்ந்து 43வது நாளாக ரஷ்ய போர் தொடுத்து வரும் நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் ஐரோப்பாவை விட்டு வெளியேறி உக்ரைனுக்கு திரும்பி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஹங்கேரி தலைநகர் Budspest ரயில் நிலையில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள், உக்ரைனுக்கு செல்லும் ரயிலுக்காக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனது சகோதரியுடன் நாடு திரும்பும் கீவ்வைச் சேர்ந்த 39 வயதான Yulia Kalinina, இது ஒரு எளிதான முடிவல்ல என்பதை ஒப்புக்கொண்டார்.
ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுக்கும் பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா!
எனக்கு பயமாக இருக்கிறது. ஆனால் நான் வீட்டிற்கு செல்ல வேண்டும். எனது கணவரை காண வேண்டும். இங்கே தனியாக பயத்தில் இருப்பதை விட நான் அவருடன் பயப்படுவதை விரும்புகிறேன் என Yulia Kalinina கூறினார்.
18 முதல் 60 வயதுடைய ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் 22,000க்கும் அதிகமான உக்ரேனியர்கள் எல்லையைத் தாண்டி நாடு திரும்பியதாக உக்ரேனிய எல்லைக் காவலர் சேவை தெரிவித்துள்ளது.