எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து தரையிறங்க மறுப்பு... இந்தியருக்கு ஏற்பட்ட துயரம்
உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டில் தற்போதைய மார்ச் - மே பருவத்தில் இந்தியர் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர் என இருவர் மரணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
மரண மண்டலம்
இந்தியாவைச் சேர்ந்த 45 வயதான சுப்ரதா கோஷ், 8,849 மீற்றர் (29,032 அடி) சிகரத்தை அடைந்த பிறகு திரும்பும் நிலையில் ஹிலாரி முகாமின் கீழே வியாழக்கிழமை மரணமடைந்துள்ளார்.
ஹிலாரி முகாமில் இருந்து சுப்ரதா கோஷ் தரையிறங்க மறுத்ததாகவே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த விவகாரத்தில் மேலதிக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
ஹிலாரி முகாம் என்பது எவரெஸ்ட் சிகரத்தில் மரண மண்டலம் என மலையேறுபவர்களால் திகிலுடன் குறிப்பிடும் பகுதியிலேயே அமைந்துள்ளது.
தெற்கு வளைவுக்கும் சிகரத்திற்கும் இடையில் 8,000 மீற்றர் (26,250 அடி) உயரமுள்ள ஒரு பகுதி, இயற்கையாகவே ஆக்ஸிஜனின் அளவு உயிர்வாழ்வதற்கு போதுமானதாக இருப்பதில்லை. தற்போது அவரது சடலத்தை தரைக்கு கொண்டுவர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 45 வயதான பிலிப் II சாண்டியாகோ, புதன்கிழமை இரவு தெற்கு கோல் பகுதியில் தனது பயணத்தின் போது மரணமடைந்துள்ளார் என்று சுற்றுலாத் துறை அதிகாரி ஹிமல் கௌதம் தெரிவித்துள்ளார்.
459 பேருக்கு அனுமதி
நான்காவது உயர் முகாமை அடைந்தபோது சாண்டியாகோ சோர்வாக காணப்பட்டார் என்றும், அவரது கூடாரத்தில் ஓய்வெடுக்கும்போது மரணமடைந்துள்ளார் என்றும் கௌதம் தெரிவித்துள்ளார்.
சாண்டியாகோ மற்றும் கோஸ் இருவரும் பண்டாரி ஏற்பாடு செய்த ஒரு சர்வதேச பயணத்தின் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். மே மாதத்தில் முடிவடையும் நடப்பு சீசனில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற 459 பேருக்கு நேபாளம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வாரம் கிட்டத்தட்ட 100 மலையேறுபவர்களும் அவர்களது வழிகாட்டிகளும் ஏற்கனவே சிகரத்தை அடைந்துவிட்டனர். உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான நேபாளத்திற்கு மலையேற்றம் மற்றும் சுற்றுலா ஆகியவை வருமானம் மற்றும் வேலைவாய்ப்புக்கான ஆதாரமாக உள்ளன.
இமயமலை தரவுத்தளம் மற்றும் மலையேற்ற அதிகாரிகளின் தகவல்களின் அடிப்படையில், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் பயணங்கள் தொடங்கியதிலிருந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்தது 345 பேர் இறந்துள்ளதாக தெரிய வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |