போலி உயிலில் இறந்து போன பெண்ணின் கை ரைகையை எடுத்த உறவினர்கள்: வெளியான அதிர்ச்சியூட்டும் விடியோ!
ஆக்ராவில் இறந்து போன பெண்ணின் கட்டை விரல் ரேகையை உறவினர்கள் எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
வீடியோ வைரல்
இறந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் அவரது கட்டைவிரல் ரேகையை எடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை கண்ட பலரும் உறவினர்களது செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இணையத்தில் வைரல் ஆன இந்த வீடியோவில் காரில் சடலமாக கிடந்த பெண்ணின் கட்டை விரல் ரேகையை ஒருவர் எடுப்பதை காண முடிகிறது.
இந்த வீடியோ தற்போது வைரலாகிவந்தாலும் இந்த சம்பவம் கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்ததாக கூறப்படுகிறது.
சொத்திற்காக நடந்தது அம்பலம்
இறந்த பெண்ணின் பேரன் ஜிதேந்திர ஷர்மா வீடியோவில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
இறந்த கமலா தேவி தனது தாயின் அத்தை என்றும், அவர் கடந்த மே 8, 2021-ஆம் ஆண்டில் உயிரிழந்துவிட்டார் எனவும் கூறியுள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு கமலா தேவியின் கணவர் இறந்துவிட்டதாலும், தம்பதியருக்கு குழந்தைகள் இல்லாததாலும், அவரது உடலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது, அவரது மைத்துனரின் மகன்கள் போலி உயிலில் அவரது கட்டைவிரல் ரேகையை எடுத்ததாக சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
Thumb impression of a dead woman taken forcibly on legal papers by a known family in Agra. Looks like it's an advocate getting it done. Act caught on camera!
— Judge Sahab❣️ (@lawWalaLadka) April 11, 2023
Video via @sudhirkmr6931 pic.twitter.com/UdBqcMBf1l
ஆக்ரா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதாகக் கூறி அவரது உடலை எடுத்துச் சென்ற அவர்கள், காரை நிறுத்தி வழக்கறிஞர் முன்னிலையில் விருப்பத்தின் பேரில் அவரது கட்டைவிரல் ரேகையை எடுத்துள்ளனர்.
இறந்த பெண் பொதுவாக கையொப்பம் போடுவதே வழக்கம், ஆனால் எப்படி உயிலில் கை ரேகை வைத்தார் என அவரது குடும்பத்தினர் சந்தேகத்தில் இருந்துள்ளனர். பின்னர் சமூக வலைதளத்தில் பரவிய இந்த வீடியோ மூலம் அவர்களது சந்தேகம் உறுதியாகியுள்ளது.