ரஷ்ய எண்ணெய் இறக்குமதி... அம்பானி நிறுவனத்திற்கு ட்ரம்ப் அளித்த சிறப்பு அனுமதி
இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்வதற்காக அமெரிக்காவிடமிருந்து ஒரு மாத கால சலுகையைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறப்பு அனுமதி
சமீபத்திய நிலவரப்படி, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரஷ்யாவின் Rosneft நிறுவனத்திடமிருந்து எண்ணெய் ஏற்றுமதிகளைத் தொடர்ந்து பெற்று வருவதாக எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்ய எண்ணெய் உற்பத்தியாளர்கள் மீது அமெரிக்கா விதித்த தடைகளையும் மீறி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சிறப்பு அனுமதி பெற்றுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் மீது ட்ரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்தது. இதன் விளைவாக, அந்த நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்குத் தங்களின் பரிவர்த்தனைகளை முடித்துக்கொள்ள நவம்பர் 21 வரை அவகாசம் வழங்கப்பட்டது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரஷ்ய எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெஃப்டுடன் நீண்டகால ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளது. இதனால் ஒரு நாளைக்கு சுமார் 500,000 பீப்பாய்கள் ரஷ்ய எண்ணெயை வாங்க முடியும்.
இந்த நிலையில், கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்வதற்காக அமெரிக்காவிடமிருந்து ஒரு மாத கால சலுகையைப் பெற்றுள்ளது.

குறைவான விலையில்
ஆனால், அமெரிக்கா தரப்பில் இதை உறுதி செய்ய மறுத்துள்ளது. ரிலையன்ஸ் தரப்பில், இது ஏற்கனவே ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட ஏற்றுமதி என்றே விளக்கமளித்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் தனது ரோஸ்நெஃப்ட் ஒப்பந்தத்தின் கீழ் கடைசி சரக்கு நவம்பர் 12 அன்று ஏற்றப்பட்டதாகக் கூறியுள்ளது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை வைத்திருக்கும் நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் தனது எண்ணெய் விற்பனை மற்றும் ஏற்றுமதிக்காக நிலையான நிநியோகம் மற்றும் குறைவான விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக ரஷ்ய ரோஸ்நெஃப்ட் உடன் நீண்டகால ஒப்பந்தம் செய்து கொண்டது.

தற்போது அமெரிக்காவின் தடையால் இந்த விநியோகம் பாதிக்கப்பட்டதை அடுத்து ட்ரம்ப் நிர்வாகம் கொடுத்துள்ள இந்த அவகாசம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பேருதவியாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது.
அக்டோபர் மாதம் ட்ரம்ப் நிர்வாகம் ரோஸ்நெஃப்ட் மீது தடை விதித்தது, அத்துடன் ரிலையன்ஸ் நவம்பர் 21 வரையில் பரிவர்த்தனைகளை முடிக்க அவகாசம் அளித்தது.
ஆனால் நவம்பர் 22 முதல் ரிலையன்ஸ் ரோஸ்நெஃப்ட் நிறுவனத்தில் இருந்து சுமார் 15 கப்பல் கச்சா எண்ணெய் பெற்றுள்ளது என க்ளெப்பர் தரவுகள் கூறுகிறது. ஆனால் ரிலையன்ஸ் தரப்பில் இவை ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |