நாட்டை விட்டு வெளியேறினார் வாக்னர் படைத்தலைவர்
ரஷ்யாவில் வாக்னர் படை கிளர்ச்சியை நிறுத்தியதாக செய்தி வெளியான நிலையில், அதன் தலைவர் பிரிகோஷின் நாட்டை விட்டு வெளியேறினார்.
வாக்னர் படையின் கிளர்ச்சி
உக்ரைனுக்கு எதிரான போரில் தங்களுக்கு சரியான ஆயுதங்களை வழங்கவில்லை என்று வாக்னர் படைத்தலைவர் பிரிகோஷின் அதிரடி குற்றம்சாட்டினார்.
அதனைத் தொடர்ந்து புடின் அரசுக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டினார். இதனை புடின் 'மிகப்பெரிய துரோகம்' என்றும், கிளர்ச்சியாளர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தார்.
வெளியேறிய பிரிகோஷின்
அதன் பின்னர் வாக்னர் படையின் திடீர் புரட்சி உடனடியாக முடிவுக்கு வந்துவிட்டது. அதன்படி, வாக்னர் படைத்தலைவர் பிரிகோஷின் தனது குழுவுடன் ரஷ்யாவில் இருந்து வெளியேறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
வாக்னர் படையுடனான சமரசத்தினால் ரஷ்யாவில் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்ய தலைமைக்கு ஏற்பட்ட புதிய தலைவலி நீங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Prigozhin's Press Service
இதற்கிடையில் வாக்னர் படை ரஷ்ய ராணுவத்துடன் இணக்கத்துடன் செயல்படுமா, அதன் தலைவர் பிரிகோஷின் பெலாரசில் இருந்தபடி அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |