நாடொன்றில் உச்சத்தை எட்டிய பணவீக்கம்! பெரும் பின்னடைவில் மில்லியன் கணக்கான மக்கள்
அவுஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் பணவீக்க அறிக்கை
மத்திய கிழக்கு போரினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை பிரதிபலிக்கும் அவுஸ்திரேலியாவின் முதல் பணவீக்க அறிக்கை வெளியாகியுள்ளது.

அங்கு மார்ச் மாதத்தில் ஒட்டுமொத்த பணவீக்கம் 1.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், ஆண்டு பணவீக்கம் 3.7 சதவீதத்தில் இருந்து 4.6 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் அவுஸ்திரேலிய புள்ளியியல் பணியகம் வெளிப்படுத்தியுள்ளது.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் உச்சத்தை எட்டியுள்ளதால், வீட்டுக் கடன் வைத்திருக்கும் மில்லியன் கணக்கான அவுஸ்திரேலியர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு போரே முக்கிய காரணம்
அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தை விட சுமார் ஒன்றரை சதவீதப் புள்ளிகள் அதிகமாக, அவுஸ்திரேலியா எந்தவொரு முக்கிய முன்னேறிய பொருளாதாரத்தையும் விட அதிக பணவீக்கத்தைத் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.
பணவீக்கத்தின் சமீபத்திய உயர்விற்கு மத்திய கிழக்கு போரே முக்கிய காரணம் என்று அல்பேனிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |