வழக்கத்துக்கு மாறாக உக்ரைன் ஜனாதிபதி பிரான்சுக்கு விடுத்துள்ள கோரிக்கை
உக்ரைன் ஜனாதிபதியாகிய வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, கடந்த சில வாரங்களாக மேற்கத்திய நாடுகளின் நாடாளுமன்றங்களில் காணொளிக்காட்சி வாயிலாக உரையாற்றி வருகிறார்.
தனது நாட்டுக்கு ஆதரவு கோரி வரும் ஜெலன்ஸ்கி, நேற்று காணொளிக்காட்சி வாயிலாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
வழக்கமாக, தங்களுக்கு ஆயுத உதவி வேண்டும் என்று மட்டுமே நாடுகளைக் கோரும் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் நாடாளுமன்றம் முன்பு கூடுதலாக ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
சுதந்திரம் பெறுவதற்காக எங்களுக்கு கூடுதல் உதவி வேண்டும் என்ற அவர், இன்னமும் சில பிரெஞ்சு நிறுவனங்கள் ரஷ்யாவில் தொடர்ந்து இயங்கி வருவதாகவும், சிலர் தங்கள் தலைகளை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டு ரஷ்யாவில் பணம் பார்க்க முயன்றுகொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார்.
அந்த நிறுவனங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அப்பாவி மக்களைக் கூட கொல்லும் கொலைகாரர்களுக்கு பண உதவி செய்துகொண்டிருக்கிறார்கள் என்றார் அவர்.
இலாபத்தை விட கொள்கைகள் முக்கியம் என்ற ஜெலன்ஸ்கி, அந்த நிறுவனங்களும் ரஷ்யாவிலிருந்து வெளியேறவேண்டும் என கேட்டுக்கொண்டார்.