ஐக்கிய அரபு அமீரகம் செல்ல இவர்களுக்கு விசா தேவை இல்லை... யார் யார் அவர்கள்
உலகின் 82 நாடுகள் விசா ஏதுமின்றி, ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு பயணிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
GCC நாடுகள் கூட்டமைப்பு
ஐக்கிய அரபு அமீரக நிர்வாகம் வெளிநாட்டவர்களுக்கு விசா தொடர்பில் இரண்டு வாய்ப்புகள் அளிக்கிறது. 30 நாட்களுக்கான விசா ஒன்றும், அதை மேலும் 10 நாட்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம், இரண்டாவதாக 90 நாட்களுக்கான விசா.
இதில் GCC நாடுகள் கூட்டமைப்பில் உள்ள சவுதி அரேபியா, குவைத், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஓமன் நாட்டவர்கள் தங்கள் கடவுச்சீட்டு அல்லது அடையாள அட்டை மட்டுமே பயன்படுத்தி, விசா இல்லாத பயணம் மேற்கொள்ளலாம்.
இந்திய குடிமக்களை பொறுத்தமட்டில், பொதுவான கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற பின்னர் 14 நாட்களுக்கான விசா பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் மேலும் 14 நாட்களுக்கு இந்த விசாவினை நீட்டித்துக் கொள்ளலாம்.
விசா கட்டாயம்
ஆனால் வெளிநாட்டு பயணிகள் சென்ற பின்னர் விசா பெறுவதற்கு குறைந்தது 6 மாதத்திற்கு அவர்களின் கடவுச்சீட்டு செல்லுபடியாகும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அமெரிக்கா, பிரித்தானியா அல்லது ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் விசா அல்லது அந்தந்த அரசாங்கம் விநியோகித்துள்ள நிரந்தர வதிவிட அட்டையுடன் பயணிக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், உலகின் 115 நாடுகளை சேர்ந்த குடிமக்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணிக்க விசா கட்டாயம் என தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |