ரஷ்ய படைகளுக்கு விஷ கேக்குகளை விருந்தளித்த உக்ரைன் மக்கள்: 500 வீரர்கள் கவலைக்கிடம்!
உக்ரைனின் இசியம்(izyum) மாகாண மக்கள் தங்கள் பகுதியில் உள்ள ரஷ்ய ராணுவ ஆக்கிரமிப்பாளர்களுக்கு விஷம் கலந்த கேக்குகளை விருந்தளித்து வரவேற்றுள்ளனர்.
உக்ரைனில் ரஷ்ய ராணுவம் 5 வாரங்களாக போர் தாக்குதலை நடத்தி வருகிறது, இதில் உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ள நிலையில், சில நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளும் ரஷ்ய ராணுவம் கொண்டுவந்துள்ளன.
இந்தநிலையில், உக்ரைனின் இசியம்(izyum) மாகாணத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ள ரஷ்ய ராணுவ ஆக்கிரமிப்பாளர்களுக்கு அப்பகுதி மக்கள் விஷம் கலந்த கேக்குகளை விருந்தளித்து வரவேற்றுள்ளனர்.
?Жителі Ізюмського району «пригостили» окупантів отруєними пиріжками. В результаті двоє окупантів загинули одразу, ще 28 потрапили до реанімації. Близько 500 військовослужбовців РФ знаходяться в лікарнях внаслідок важкого отруєння алкоголем невідомого походження. pic.twitter.com/ratiNg4X8m
— Defence intelligence of Ukraine (@DI_Ukraine) April 2, 2022
இந்த விஷ கேக்குகளை உண்ட இரண்டு ரஷ்ய ராணுவ வீரர்கள் உடனடியாக உயிரிழந்த நிலையில் 28 ரஷ்ய ராணுவ வீரர்கள் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 500 ரஷ்ய ராணுவ வீரர்கள் இதுவரை கண்டறிய படாத ஆல்கஹால் விஷத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
இதனை உக்ரைன் ராணுவத்தின் பாதுகாப்பு உளவுத்துறை ட்விட்டர் பக்கத்தில் வெளியீட்டு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.