600 பேர் படுகொலை... கொன்று குவிக்கப்பட்ட தலிபான் போராளிகள்! பஞ்ச்ஷீரில் கதற விடும் எதிர்ப்பு படை
ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் 600 தலிபான்கள் கொன்று குவிக்கப்பட்டதாக எதிர்ப்பு படை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பெரும்பகுதி தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. எனினும், பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கு உள்ளிட்ட சில பகுதிகள் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வரவில்லை.
தலிபான்களுக்கும் எதிர்ப்பு படையினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து பஞ்ச்ஷீரில் இரு தரப்பினருக்கும் மோதல் நடைபெற்று வருகிறது.
மறைந்த முன்னாள் ஆப்கானிஸ்தான் கெரில்லா படை தளபதி அகமத் ஷா மசூத்தின் மகன் அகமத் மசூத் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி அம்ருல்லா சலேஹ் ஆகியோரின் தலைமையிலான தேசிய எதிர்ப்பு படையின் கோட்டையாக பஞ்ச்ஷீர் உள்ளது.
இந்நிலையில் பஞ்ச்ஷீரில் சனிக்கிழமை இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கிட்டதட்ட 600 தலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாக எதிர்ப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பு படையின் செய்தித்தொர்பாளர் Fahim Dashti ட்விட்டரில் பதிவிட்டதாவது, சனிக்கிழமை காலை முதல் பஞ்ச்ஷிரின் பல்வேறு மாவட்டங்கள் கிட்டதட்ட 600 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.
Paryan #PanjshirValley
— Panjshir_Province (@PanjshirProvin1) September 4, 2021
Pray for #panjshir pic.twitter.com/RVfkkIPASu
1,000 க்கும் மேற்பட்ட தலிபான் போராளிகள் பிடிபட்டனர் அல்லது தானாக சரணடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் பிற மாகாணங்களில் இருந்து பொருட்களை பெறுவதில் பஞ்ச்ஷிரில் உள்ள தலிபான்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக எதிர்ப்பு படை செய்தி தொடர்பாளர் கூறினார்.