ஊழல் வழக்கில் கைதான அமைச்சர் மீண்டும் பதவியில்... தோற்கடிக்கப்பட்ட தீர்மானம்!
சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரனை பதவியில் இருந்து நீக்க கோரும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஈஸ்வரன்
சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சரான ஈஸ்வரன் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வழக்கு விசாரணை முடியும் வரை அவருக்கான மாத சம்பளமும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈஸ்வரனை தற்காலிகமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க கோரி சிங்கப்பூர் முன்னேற்ற கட்சியின் உறுப்பினர்கள் கடந்த 19 ஆம் திகதி தீர்மானமொன்றை கொண்டு வந்திருந்தனர்.
இதனை எதிர்த்து ஆளும் மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திராணி ராஜா ஒரு தீர்மானமொன்றை கொண்டு வந்திருந்தார்.
இதனையடுத்து, குறித்த தீர்மானம் தொடர்பான விவாதம் 2 மணி நேரம் நடைபெற்றிருந்தது.
நீடித்த விவாதத்திற்கு பிறகு அமைச்சர் ஈஸ்வரனை பதவியில் இருந்து நீக்க கோரி சிங்கப்பூர் முன்னேற்ற கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |