இந்த நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளது.., பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
2024-ம் நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக குறைந்தது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கை
கடந்த பிப்ரவரி மாதம் 1 -ம் திகதி இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தற்போது, புதிய அரசு அமைந்துள்ளதால் இன்று இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இதுவாகும். இன்று அவர் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
அதில், 2025 -ம் நிதியாண்டில் உண்மையான GDP வளர்ச்சி 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் பணவீக்கம் குறித்து பொருளாதார ஆய்வறிக்கையில், "உலக பிரச்சினைகள், விநியோக சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் சீரற்ற பருவமழை ஆகியவற்றால் பணவீக்கம் தூண்டப்பட்ட போதிலும் பணவியல் கொள்கை நடவடிக்கைகளால் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது.
கடந்த 2023 -ம் நிதியாண்டில் 6.7 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் 2024 -ம் நிதியாண்டில் 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், இந்தியாவில் விலை ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பருவமழையின் எதிர்பார்ப்பு, இறக்குமதி பொருட்களின் விலை கட்டுப்படுத்துதல் ஆகியவை ரிசர்வ் வங்கியின் பணவீக்க கணிப்புகளுக்கு நம்பிக்கையை கொடுக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், பணவீக்க கண்ணோட்டம் கடுமையாக இருக்காது. பருப்பு வகைகளில் விலை உயர்வு தொடர்பான பிரச்சனையை இந்தியா எதிர்கொள்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |