பிரித்தானியாவை விட்டு வெளியேறும் இன்னொரு பில்லியனர்
பிரித்தானியாவை விட்டு மற்றோரு பில்லியனர் தொழிலதிபர் வெளியேறுகிறார்.
Revolut எனும் டிஜிட்டல் வங்கி செயலியை உருவாக்கிய நிக் ஸ்டொரோன்ஸ்கி (Nik Storonsky) தற்போது பிரித்தானியாவை விட்டு வெளியேறி ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறவுள்ளார்.
41 வயதான நிக், Forbes பத்திரிக்கையின் தகவலின்படி, தனது பிரித்தானிய குடியிருப்பை மாற்றி அமீரகத்தை புகிய வசிப்பிடமாக பதிவு செய்துள்ளார்.
இவர் Revolut நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் (CEO), மிகப்பெரிய பங்குதாரராகவும் உள்ளார். அவரது பங்கு மதிப்பு 7.9 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசின் புதிய வரி மாற்றம் காரணமாக, பல பில்லியனர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
2025 ஏப்ரலில், 200 ஆண்டுகளாக இருந்த 'non-dom' வரி நீக்கப்பட்டது. இதன்மூலம், வெளிநாட்டு வருமானங்கள் பிரித்தானிய வரிகளில் இருந்து விலக்கப்படமுடியாது.
இதுவரை உலகளாவிய பணக்கார்கள் லண்டனை வசிப்பிடமாக தேர்ந்தெடுத்ததற்கான முக்கிய காரணம் இந்த வரி சலுகை தான்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக நேரம் செலவிடுகிறார் என்றும், பிரித்தானியாவில் இன்னும் ஒரு வீடு வைத்திருப்பதாக Gulf News தெரிவித்துள்ளது.
Revolut நிறுவனத்திற்கு பிரித்தானிய வங்கி கட்டுப்பாட்டு அமைப்புடன் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. 15 மாதங்களாக ஆய்வு நடந்தும் பிரித்தானிய வங்கி உரிமம் வழங்கப்படவில்லை. இதனால், பிரித்தானியாவில் வளர்ச்சி தாமதமாகியுள்ளது.
மாறாக அமீரகத்தில் Revolut-க்கு முக்கிய உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. UAE மத்திய வங்கி, டிஜிட்டல் பேமண்ட் மற்றும் Stored Value சேவைகளுக்கான ஆரம்ப அனுமதியை வழங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Nik Storonsky UAE relocation, Revolut founder leaves UK, UK billionaire tax exodus, Non-dom tax rule abolished UK, Revolut banking license UK, Dubai fintech expansion, UAE digital banking license, Billionaire migration 2025, Revolut CEO net worth, UK to UAE billionaire shift