உலகின் பெரும் கோடீஸ்வரரான அரசியல்வாதி... அம்பானி, அதானிகளை மொத்தமாக வாங்கும் சொத்து மதிப்பு
உலகின் பெரும் கோடீஸ்வரர்களைப் பற்றி பேசும்போது, எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் மற்றும் இந்தியாவின் முகேஷ் அம்பானி போன்றவர்கள் பெயர்கள் பொதுவாக நினைவுக்கு வரும்.
மொத்தமாக வாங்கும்
இந்த வரிசையில் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு பெயர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின். அவர் உலகளவில் பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவர் என்றே கூறப்படுகிறது.
இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானி உள்ளிட்டவர்களை மொத்தமாக வாங்கும் அளவுக்கான சொத்துக்களை விளாடிமிர் புடின் திரட்டி வைத்துள்ளார்.
ஆனால் விளாடிமிர் புடின் வாங்கும் சம்பளம் என்பது ஆண்டுக்கு வெறும் 140,000 டொலர் மட்டுமே. அத்துடன் ஒரு சிறிய 800 சதுர அடி அபார்ட்மெண்ட், பண்ணைகளில் பயன்படுத்தப்படும் டிரெய்லர் மற்றும் மூன்று கார்கள் என்றே அரசாங்கத் தரவுகளில் பதிவாகியுள்ளது.
உண்மையில் விளாடிமிர் புடினின் சொத்து மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. புடினின் அபரிமிதமான சொத்துக்கள் அவரது ஆடம்பரமான உடைமைகளில் வெளிப்படுகிறது.
கருங்கடலை ஒட்டிய அவரது பெரிய எஸ்டேட் இந்த வரிசையில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அத்துடன் மேலும் 19 மாளிகைகள் புடினுக்கு சொந்தமாக உள்ளது என்றே கூறுகின்றனர்.
திருடர்களால் நடத்தப்படும் நிர்வாகம்
உயர் ரக 700 கார்கள், 58 விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர், 716 மில்லியன் டொலர் மதிப்பிலான தனிப்பட்ட சொகுசு விமானம், இதனுடன் 700 மில்லியன் டொலர் மதிப்பிலான ஆடம்பரத்தின் உச்சமான படகு, அரிதான கைக்கடிகாரங்களின் தொகுப்பு என பட்டியல் நீளுகிறது.
1999ல் இருந்தே ரஷ்யாவின் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் தொடர்ச்சியாக பொறுப்பில் இருந்து வருகிறார். ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு ரஷ்ய அல்லது சோவியத் அரசில் நீண்ட காலம் பணியாற்றிய தலைவராக புடின் மாறியுள்ளார்.
புடின் தனது அரசியல் வாழ்க்கைக்கு முன், கேஜிபியுடன் வெளிநாட்டு உளவுத்துறை அதிகாரியாக 16 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். புடினின் ரஷ்யா என்பது திருடர்களால் நடத்தப்படும் நிர்வாகம் என்றே கூறுகின்றனர்.
விளாடிமிர் புடின் குவித்துள்ள உண்மையான சொத்துக்களின் மதிப்பு விவாதத்திற்குரியதாக இருந்தாலும், அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் அறிக்கையிடப்பட்ட சொத்துக்களின் பின்னணி என்பது மர்மமாகவே உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |