ஜோ ரூட் ரன் பசியுள்ளவர்: ஒரே நாளில் சாதனைகளை முறியடித்ததை பாராட்டிய அவுஸ்திரேலிய ஜாம்பவான்
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புள்ளிவிவரங்களுக்காக விளையாடுவதில்லை என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஜோ ரூட்
ஓல்ட் டிராஃபோர்டில் நடந்து வரும் டெஸ்டில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (Joe Root) 248 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 150 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,409 ஓட்டங்களை எட்டி ராகுல், ஜேக் கல்லிஸ் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகிய ஜாம்பவான்களை முந்தினார்.
தற்போது டெஸ்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ரூட் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் சச்சின் டெண்டுல்கரை பிடிக்க இன்னும் 2,512 ஓட்டங்களே உள்ளது.
ரிக்கி பாண்டிங்
இந்நிலையில் ஜோ ரூட் குறித்து அவுஸ்திரேலிய ரிக்கி பாண்டிங் (Ricky Ponting) கூறுகையில், "ரூட்டின் பாரம்பரிய நுட்பமும், அசைக்கமுடியாத மனோபாவமும் பாராட்டுக்குரியது. அவர் எண்களுக்காக விளையாடுவதில்லை.
ஆனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்ததும், தன்னைப் பற்றி பெருமைப்படுவதற்கு அவருக்கு எல்லா காரணங்களும் இருக்கும். அவர் நேர்த்தியானவர், ஸ்டைலானவர் மற்றும் ரன் பசியுள்ளவர்.
அவர் புள்ளி விவரங்கள் மற்றும் எண்கள் ஒன்றல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
நீங்கள் விளையாடும்போது நீங்கள் இல்லை, ஆனால் நீங்கள் முடித்த பின் சாதித்ததைப் பற்றி பெருமைப்படலாம்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |