புதிய சாதனை எண்ணிக்கை... சவுதி அரேபியாவைக் கடுமையாகக் கண்டித்த மனித உரிமை அமைப்புகள்

Saudi Arabia Middle East
By Arbin Dec 21, 2025 07:40 PM GMT
Report

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ஆண்டுதோறும் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளின் எண்ணிக்கையில் சவுதி அரேபியா தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

இரத்தக்களரி நிறைந்த ஆண்டு

பிரித்தானியாவைச் சேர்ந்த Reprieve என்ற குழுவினர் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு இதுவரை குறைந்தது 347 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது, 2024ல் இது 345 என பதிவாகியிருந்தது.

புதிய சாதனை எண்ணிக்கை... சவுதி அரேபியாவைக் கடுமையாகக் கண்டித்த மனித உரிமை அமைப்புகள் | Rights Groups Condemn Saudi

மனித உரிமை அமைப்புகளின் கண்காணிப்பு தொடங்கியதிலிருந்து, இதுவே சவுதி அரேபியாவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட மிகவும் இரத்தக்களரி நிறைந்த ஆண்டு என்று Reprieve பதிவு செய்துள்ளது.

சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட கைதிகளில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட இரண்டு பாகிஸ்தான் நாட்டவர்களும் அடங்குவர்.

மட்டுமின்றி, இந்த ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒரு பத்திரிகையாளர் மற்றும் போராட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நேரத்தில் சிறுவர்களாக இருந்த இரண்டு இளைஞர்களும் அடங்குவர். ஐந்து பேர் பெண்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய படையில் குஜராத் மாணவன்... காப்பாற்றக் கோரி உக்ரைனில் இருந்து வெளியிட்ட காணொளி

ரஷ்ய படையில் குஜராத் மாணவன்... காப்பாற்றக் கோரி உக்ரைனில் இருந்து வெளியிட்ட காணொளி

ஆனால், அவர்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர், ஆபத்தில்லாத போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டுள்ளனர்; இது சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரநிலைகளுக்கு முரணானது என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

மரண தண்டனைக்கு இலக்கானவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வெளிநாட்டவர்கள் என்றும், சவுதி அரேபியாவில் அவர்கள் போதைப்பொருள் மீதான போரின் ஒரு பகுதியாக மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், சவுதி குற்றவியல் நீதி அமைப்பில் சித்திரவதை மற்றும் கட்டாய வாக்குமூலங்கள் ஒரு பரவலான நிகழ்வாக உள்ளன என்றே Reprieve குழுவின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவிற்கான மரண தண்டனைக்கு எதிரானப் பிரிவுத் தலைவர் Jeed Basyouni தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சவுதி அதிகாரிகள் அதிகாரப்பூர்வமற்ற தற்காலிகத் தடையை முடிவுக்குக் கொண்டுவந்ததிலிருந்து, போதைப்பொருள் தொடர்பான மரண தண்டனைகள் பெருமளவில் அதிகரித்துள்ளன.

மனித உரிமைகள் அத்துமீறல்

கடந்த 2017ல் பட்டத்து இளவரசராக முடி சூட்டப்பட்ட சவுதி அரேபியாவின் நடைமுறை ஆட்சியாளரான முகமது பின் சல்மான், கடந்த சில ஆண்டுகளில், சமூகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதுடன், அதே நேரத்தில் விமர்சனங்களையும் ஒடுக்கி, நாட்டை ஆழமாக மாற்றியுள்ளார்.

மட்டுமின்றி, எண்ணெயைச் சார்ந்திருக்கும் தனது பொருளாதாரத்தைப் பன்முகப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில், அவர் சவுதி அரேபியாவை வெளி உலகிற்குத் திறந்துவிட்டுள்ளார், மதக் காவல்துறையினரைத் தெருக்களிலிருந்து அகற்றியுள்ளார், மேலும் பெண்கள் வாகனம் ஓட்டவும் அனுமதித்துள்ளார்.

புதிய சாதனை எண்ணிக்கை... சவுதி அரேபியாவைக் கடுமையாகக் கண்டித்த மனித உரிமை அமைப்புகள் | Rights Groups Condemn Saudi

இருப்பினும், சவுதி அரேபியாவின் மனித உரிமைகள் அத்துமீறல் என்பது மிகவும் மோசமாகவே உள்ளது. ரிப்ரீவ் அமைப்பின்படி, தூக்கிலிடப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழக்கமாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுவதில்லை, அல்லது சடலம் ஒப்படைக்கப்படுவதில்லை, அல்லது அவர்கள் எங்கு அடக்கம் செய்யப்பட்டார்கள் என்பது பற்றியும் தெரிவிக்கப்படுவதில்லை.

மட்டுமின்றி, சவுதி அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றும் முறையை வெளிப்படுத்துவதில்லை, இருப்பினும் அது தலையைத் துண்டித்தல் அல்லது துப்பாக்கிச் சூட்டுக் கொல்லுதல் ஆகிய இரண்டில் ஒன்றாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US