அதி தீவிர புயலாக வலுப்பெறும் ரிமால்
ரிமால் புயல் காரணமாக கொல்கத்தாவில் 21 மணிநேரத்திற்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் வடக்கு மற்றும் அதனையொட்டிய கிழக்கு மத்திய கடல் பகுதியில் ரிமால் புயல் நிலைக்கொண்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் புயல் அதி தீவிரப்புயலாக வலுப்பெறும்.
இதன்காரணமாக மணிக்கு 135 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும், நள்ளிரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் கொல்கத்தா விமான நிலையத்தில் 21 மணிநேரத்திறகு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தூத்துக்குடி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ரிமால் புயல் வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடற்கரையில் சாகர் தீவு, கேபபுரா இடையே இன்று கரையை கடக்கக்கூடும் என கூறப்படுகிறது.
#WATCH | West Bengal: As per IMD, cyclone 'Remal' is to intensify into a severe cyclonic storm in the next few hours and cross between Bangladesh and adjoining West Bengal coasts around May 26 midnight as a Severe Cyclonic Storm
— ANI (@ANI) May 26, 2024
(Visuals from Sundarbans, South 24 Parganas) pic.twitter.com/1yp3xRxUPr