துபாய்க்கு புலம்பெயர்ந்த பிரித்தானிய பிரபலத்தின் வீடியோ
இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து வீரர் ரியோ பெர்டினாண்ட் துபாயில், தனது வீட்டைச் சுற்றி தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்ததாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
ரியோ பெர்டினாண்ட்
இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் வீரரான ரியோ பெர்டினாண்ட் (Rio Ferdinand), கடந்த ஆண்டு ஆகத்து மாதம் தனது குடும்பத்துடன் துபாக்கு புலம்பெயர்ந்தார்.
கடந்த சில நாட்களில் ஈரானின் துபாய் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதால், அங்கு பல பிரபலங்கள் அச்சமடைந்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது ரியோ பெர்டினாண்ட்டும் அச்சம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பெரிய குண்டுகளின் சத்தத்தைக் கேட்கிறோம்
அதில், "எனக்கு இது ஒரு வித்தியாசமான வாரமாக இருந்தது என்று பொய் சொல்லப்போவதில்லை. கோவிட் காலத்தில் இருந்ததைப் போலவே, முழு குடும்பமும் நாங்கள் வழக்கமாக ஒன்றாக செய்யாத விடயங்களை செய்கிறோம்.
இன்று கொஞ்சம் வீட்டிலேயே கல்வி கற்கிறோம். ஏவுகணைகள், விமானங்கள் மற்றும் போர் விமானங்கள் - அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை - நமக்கு மேலே செல்லும் சத்தத்தைக் கேட்கும்போது பயமாக இருக்கிறது.

பெரிய குண்டுகளின் சத்தத்தைக் கேட்கிறோம், ஆனால் அது என்ன என்பது பற்றிய விவரங்கள் எங்களுக்கு தெரியாது.
குழந்தைகளுக்கு அது என்னவென்று சொல்லி, இந்த தருணத்தை அவர்கள் கடந்து செல்ல உதவுவதுதான், ஒரு தந்தையாக இப்போது முக்கியம். அமைதியாக இருக்க முயற்சி செய்து, அனைவரையும் முடிந்தவரை அமைதியாக வைத்திருக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |