17 வயது இளம் சாரதியை சுட்டுக் கொன்ற பிரான்ஸ் பொலிஸ்: இணையத்தில் வெளியான வீடியோ
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள புறநகர் பகுதியான நான்டெர்ரே-வில் பொலிஸாரால் சிறுவன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.
சிறுவனை சுட்டுக் கொன்ற பொலிஸார்
பாரிஸின் புறநகர் பகுதியான நான்டெர்ரே-வில் உள்ள போக்குவரத்து நிறுத்தத்தில் நெயில் எம் என்ற 17 வயதுடைய சாரதியை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாக பாரிஸ் உள்ளூர் வழக்குரைஞர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
? A policeman killed an arabic driver who refused to co-operate. The driver was 17 and not allowed to drive.
— Brexit Leo (@BrexitLeo) June 27, 2023
Passager was black.#Nanterre - just outside Paris. Riots have now started. Bloody #Brexit ?pic.twitter.com/UHyCTWuaiv
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார், அதில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சாரதியின் மஞ்சள் நிற கார் ஜன்னல் அருகே சென்று விசாரணை நடத்துகின்றனர், கார் அவர்களை விட்டு விலகுவதற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர் சாரதியின் இருக்கையை நோக்கி துப்பாக்கியால் சுடுகிறார்.
இதனால் கார் அருகில் உள்ள கம்பத்தில் மோதி நிற்கிறது. இதில் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக வழக்கறிஞர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளது.
Sky News
வெடித்த வன்முறை
பொலிஸ் அதிகாரியின் அத்துமீறிய துப்பாக்கி சூட்டில் இளம் வயது சாரதி கொல்லப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் பின்னர் கலவரமாக வெடித்ததில் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 25 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர் மற்றும் 40 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
Image: ZAKARIA ABDELKAF/AFP
இதையடுத்து இரவோடு இரவாக 1200 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், அத்துடன் தலைநகர் பாரிஸில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க இன்று 2000 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |