இந்திய ஜாம்பவான்களை பின்னுக்குத்தள்ளி வரலாறு படைத்த ரிஷாப் பண்ட்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரிஷாப் பண்ட் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ரிஷாப் பண்ட்
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி, கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது.
YOU SHOULD PAY YOUR INTERNET BILLS TO WATCH THIS MAN IN TESTS 🗿#INDVSSA #RishabhPant pic.twitter.com/3wORXwLi6a
— Dj¹⁸ (@iam_dj_18) November 15, 2025
முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 159 ஓட்டங்களும், இந்தியா 189 ஓட்டங்கள் எடுத்தன. பின்னர் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
இந்திய அணியின் இன்னிங்சில் ரிஷாப் பண்ட் 24 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 27 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் டெஸ்டில் அவரது சிக்ஸர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்தது. 83 இன்னிங்ஸ்களில் அவர் இதனை எட்டியுள்ளார்.
விரேந்தர் சேவாக் 91 சிக்ஸர்கள் (180 இன்னிங்ஸ்கள்) அடித்து முதலிடத்தில் இருந்த நிலையில், ரிஷாப் பண்ட் (Rishabh Pant) அவரை முந்தி சாதனை படைத்துள்ளார்.
இந்திய வீரர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக உள்ள பண்ட், சர்வதேச அளவில் 7வது இடத்தில் உள்ளார்.
டெஸ்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்தியர்கள்
- ரிஷாப் பண்ட் - 92
- விரேந்தர் சேவாக் - 91
- ரோஹித் ஷர்மா - 88
- ரவீந்திர ஜடேஜா - 80
- எம்.எஸ்.தோனி - 78
- சச்சின் டெண்டுல்கர் - 69


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |