ஆந்திர கோயிலில் வழிபட்ட பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் பெற்றோர்!
இந்திய மாநிலம், ஆந்திர பிரதேசத்தில் உள்ள கோயிலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் பெற்றோர் வழிபட்டனர்.
கோயிலில் வழிபட்ட ரிஷி சுனக்கின் பெற்றோர்
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மடாலயத்தில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் பெற்றோர் வழிபட்டனர்.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் பெற்றோரான யஷ்வீர் சுனக் மற்றும் உஷா சுனக் மற்றும் மாமியார் சுதா மூர்த்தி ஆகியோர் மந்திராலயத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி கோயிலில் ஒன்றாக சேர்ந்து வழிபாடு செய்தனர்.
இவர்களுடன் சேர்ந்து, INFOSYS -ன் சுதா நாராயண மூர்த்தியும் வந்திருந்தார். அப்போது கோயில் சார்பில் ஸ்ரீ ஸ்வாமிஜி, அவர்களுக்கு வஸ்திரம், பல மந்த்ராக்ஷதே மற்றும் நினைவுப் பரிசு ஆகியவற்றை வழங்கினார்.
புகைப்படம் வெளியிட்ட சுவாமி மடம்
இது தொடர்பான புகைப்படத்தை ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மடம் தன்னுடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டிற்கு கலந்து கொள்ள வந்த ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் அக்ஷர்தாம் கோயிலுக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |