ராஜஸ்தான் ராயல்ஸ் அணித்தலைவராகும் ரியான் பராக்? - அவரின் சாதனைகள், சொத்துமதிப்பு
இன்று தனது 23வது பிறந்தநாளை கொண்டாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரியான் பராக்கின் சாதனைகள், சொத்துமதிப்புகள் குறித்து பார்க்கலாம்.
ரியான் பராக்
ஐபிஎல் தொடரில், 2019 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் அணிக்காக ரியான் பராக்(riyan parag) விளையாடி வருகிறார்.

தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணித்தலைவராக உள்ள சஞ்சு சாம்சன், CSK அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், 2026 ஐபிஎல் தொடரில் ரியான் பராக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணித்தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

2025 ஐபிஎல் தொடரில் அணித்தலைவர் சஞ்சு சாம்சன் காயமடைந்த சில போட்டிகளில், இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழி நடத்தியுள்ளார்.
குடும்ப பின்னணி
இவரது தந்தை பராக் தாஸும் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் ஆவார். அசாம், ரயில்வே, கிழக்கு மண்டல அணி ஆகிய அணிகளில் விளையாடியுள்ளார்.

தோனி ஜார்கண்ட் அணிக்காக விளையாடிய போது, ரியானின் தந்தை தோனிக்கு எதிராக அசாம் அணியில் விளையாடியுள்ளார். இருவரும் ஒன்றாகவும் சில அணிகளில் விளையாடியுள்ளனர்.
ரியான் பராக் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் போது, அவரும் தோனிக்கு எதிரான போட்டிகளில் விளையாடியுள்ளார்.

நீச்சல் வீராங்கனையான ரியான் பராக்கின் தாயார் மிதூ பரூவா, இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார்.
சாதனைகள்
ரியான் பராக் 17 வயதில், 2017 -18 ரஞ்சி தொடரில் அசாம் அணிக்காக விளையாடி தனது கிரிக்கெட் வாழ்வை தொடங்கினார்.

21 ஆம் நூற்றாண்டில் பிறந்து, முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் இந்தியர் என்ற பெருமையை ரியான் பராக் பெற்றார்.
டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 7 அரை சதங்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரியான் பராக் பெற்றுள்ளார்.

2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி அவரை ரூ.20 லட்சத்திற்கு வாங்கியது.
அந்த தொடரில் அரைசதம் அடித்ததன் மூலம், ஐபிஎல் தொடரில் அரைசதம் அடித்த இளம்வீரர் என்ற சாதனையை அப்போது படைத்தார். 17 வயது 175 நாட்களில் இந்த சாதனையை அவர் படைத்தார்.

2022 ஐபிஎல் தொடரில், 17 கேட்ச்கள் பிடித்து, விக்கெட் கீப்பராக இல்லாமல் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
2024 ஐபிஎல் தொடரில், 4 வது இடத்தில் இறங்கி 550 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதல் இந்தியா வீரர் என்ற பெருமையை பெற்றார்.

2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள் அடித்து, 17 வருட ஐபிஎல் தொடரில் யாரும் செய்யாத சாதனையை படைத்தார்.
2024 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான T20 தொடரில் இந்திய தேசிய அணியில் இடம் கிடைத்தது.

இதன் மூலம் அசாம் மாநிலத்தில் இருந்து தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் நபர், மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் ஆடவர் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
சொத்துமதிப்பு
2022 ஐபிஎல் ஏலத்தில் அவரை ரூ.3.30 கோடிக்கு ராஜஸ்தான் அணி தக்க வைத்துக்கொண்டது.

2024 ஏலத்தில் அவரது மதிப்பு பல மடங்கு உயர்ந்து ரூ.15 கோடிக்கு அவரை தக்க வைத்துக்கொண்டது ராஜஸ்தான் அணி.
ரெட் புல் மற்றும் ரூட்டருடன் ஆகிய நிறுவனங்கள் அவரை ஒப்பந்தம் செய்துள்ளன.

அவரின் சொத்துமதிப்பு ரூ.15 கோடி இருக்கலாம் என கருதப்படுகிறது.
மேலும், ரூ.15 லட்சம் மதிப்பிலான ஹோன்டா சிட்டி கார் ஒன்றை வைத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |