ஷாங்காய் சாலையில் விழுந்த மிகப்பெரிய பள்ளம்: வைரலாகும் சிசிடிவி காட்சி
சீனாவின் ஷாங்காய் நகரில் பரபரப்பான சாலை ஒன்று திடீரென உள்வாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் விழுந்த பெரும் பள்ளம்
ஷாங்காய் நகரில் எப்போதும் வாகன நெருக்கடி அதிகமாக காணப்படும் சாலை திடீரென உள்வாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட சாலையில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்த நிலையில் அந்த தொழிலாளர்கள் முன்னிலையிலேயே சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
A massive sinkhole swallowed a road in Shanghai, China, on Wednesday morning after a reported leak at a subway construction site. No injuries were reported. pic.twitter.com/jdaD3K3N1X
— AccuWeather (@accuweather) February 12, 2026
மேலும் இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் அந்த பள்ளத்துக்குள் விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் அருகில் உள்ள கட்டிடங்களில் சிறிய பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
சாலை உள்வாங்கியதற்கான காரணம்
ஷாங்காய் நகரின் மென்மையான வண்டல் மண் மற்றும் நகரில் அதிகரித்து வரும் கட்டுமானங்களின் காரணத்தால் சாலை உள்வாங்குதல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது.
2024ம் ஆண்டு மின்ஹாங் மாகாணத்தில் கழிவு நீர் குழாய் உடைந்து 10 மீட்டர் ஆழத்துக்கு சாலை உள்வாங்கியது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |