கரீபியன் கடலில் மோதிக் கொண்ட இரண்டு கப்பல்கள்: அமெரிக்க கடற்படை வெளியிட்ட தகவல்
கரீபியன் பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
இரண்டு அமெரிக்க கடற்படை கப்பல்கள் மோதல்
கரீபியன் பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர் கப்பல்கள் கடந்த புதன்கிழமை விபத்துக்குள்ளானது.
இதில் அமெரிக்க கடற்படையின் USS Truxtun போர் கப்பலும், விநியோக கப்பலும் மோதிக் கொண்டன.
இந்த தகவலை அமெரிக்க தெற்கு கட்டளைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த விபத்தில் 2 பேர் லேசான காயமடைந்து இருப்பதாகவும் அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கு பிறகும் இரண்டு கப்பல்களும் கடலில் தொடர்ந்து பயணம் செய்வதற்கான தகுதியை பெற்று இருப்பதாக அமெரிக்க கடற்படை உறுதி செய்துள்ளது.
மேலும் இந்த மோதல் விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை கண்டறிய முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |