கடலின் நடுவே பாதை உருவாகும் அதிசயம் - பின்னணியில் அறிவியல் காரணம்

South Korea
By Karthikraja Apr 24, 2026 09:40 AM GMT
Report

தென் கொரியாவில் ஒவ்வொரு ஆண்டும், ஆண்டுக்கு இரு முறை ஒரு மணி நேரத்திற்கு கடலின் நடுவே மக்கள் நடந்து செல்லும் வகையில் இயற்கையாக பாதை உருவாகிறது.

கடலின் நடுவே உருவாகும் பாதை

தென் கொரியாவின் தென்மேற்குக் கடற்கரையோரத்தில், தென் ஜியோல்லா மாகாணத்தில் அமைந்துள்ள ஜிண்டோ தீவுக்கும், மோடோ மற்றும் சியோடோ ஆகிய சிறிய தீவுகளுக்கும் இடையேயான கடற்பரப்பில் ஜிண்டோ அதிசயம் நிகழ்கிறது. 

கடலின் நடுவே பாதை உருவாகும் அதிசயம் - பின்னணியில் அறிவியல் காரணம் | Road Through Ocean South Korea Jindo Sea Miracle

இந்த தீவுகளுக்கு இடையேயான தூரம், சுமார் 2.8 கிலோமீட்டர் நீளமும் 40 மீட்டர் அகலமும் உள்ளது. வழக்கமாக இந்த பகுதி கடல் நீரால் மூடப்பட்டிருக்கும்.

மார்ச் அல்லது ஏப்ரல் மற்றும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் ஒரு மணி நேரத்திற்க்கு மட்டும் இந்த கடலின் நடுவே நீர் விலகி இயற்கையாவே பாதை உருவாகிறது.

அந்த பகுதி மக்கள் அந்த சேற்று நிலங்களில் நடந்து சென்று, சிப்பிகள், நண்டுகள் அல்லது சிறிய ஆக்டோபஸ்களைத் தோண்டி எடுக்கிறார்கள். 

நடுவானில் மோதிக்கொண்ட போர் விமானங்கள் - விமானி எடுத்த செல்ஃபியால் விபத்து

நடுவானில் மோதிக்கொண்ட போர் விமானங்கள் - விமானி எடுத்த செல்ஃபியால் விபத்து

ஒரு மணி நேரத்தில் அலைகள் வரத்துவங்கியவுடன் பாதை மறைந்து விடும் என்பதால், அதிகாரிகள் மக்களை எச்சரித்து அலை வரும் முன்னர் வெளியேற்றி விடுவார்கள்.

இதில் உள்ளூர் இசை, நடனம் மற்றும் பாரம்பரிய உணவுகளுடன், ஜிண்டோ அற்புதக் கடல் சாலைத் திருவிழா என்ற பெயரில் ஒரு திருவிழாவாகவே கொண்டாடுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டு இதனை காண விரும்பும் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு வரும் வகையில், இதற்கான திகதி முன்னதாகவே அறிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, கடந்த ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெற்று உள்ளது.

அறிவியல் காரணம்

சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகியவற்றின் துல்லியமான நிலைகளால் உருவாக்கப்படும் பெரிய அலை வேறுபாட்டின் காரணமாகவே இந்த நிகழ்வு நடைபெறுகிறது. 

கடலின் நடுவே பாதை உருவாகும் அதிசயம் - பின்னணியில் அறிவியல் காரணம் | Road Through Ocean South Korea Jindo Sea Miracle

சில பௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில், இப்பகுதியில் குறைந்த உயரமுள்ள அலைகளை உருவாக்கும் அளவுக்கு ஈர்ப்பு விசை வலுவாக இருக்கும்.

ஜிண்டோ கடற்கரையின் நில அமைப்பு, அதன் ஆழமற்ற கடலடித் தளம், மென்மையான சரிவு காரணமாக கடலடித் தளம் நீர் மட்டத்திற்கு மேலே உயர்ந்து, ஒரு நிலப் பாலத்தை உருவாக்குகிறது.

புராணக் கதை

இவ்வாறு அறிவியல் காரணம் இருக்கும் நிலையில், அந்த மக்கள் ஒரு புராணக் கதையை நம்புகிறார்கள்.

அதன்படி, நெடுங்காலத்திற்கு முன்பு, ஜிண்டோ தீவில் புலிகளால் துரத்தப்பட்டு சோர்வடைந்த மக்கள், அந்த நிலத்தை விட்டுத் தப்பி ஓடினர். ஆனால் ப்பியோங் என்ற வயதான பெண்ணை மறந்துவிட்டனர். 

கடலின் நடுவே பாதை உருவாகும் அதிசயம் - பின்னணியில் அறிவியல் காரணம் | Road Through Ocean South Korea Jindo Sea Miracle

தன்னைக் காப்பாற்றி, தன் குடும்பத்துடன் மீண்டும் இணைக்குமாறு அந்த வயதான பெண் கடல் கடவுளான யோங்வாங்கிடம் வேண்டினாள். அந்தச் சமயத்தில், கடல் கடவுளான யோங்வாங், ஒரு குறிப்பிட்ட நாளில் கடல் திறக்கும் என்று அவளிடம் கூறினார்.

அந்த நாட்களில், கிராம மக்கள் தீவுக்கு நடந்து திரும்பிச் செல்ல முடியும் என கூறப்படுகிறது.

உள்ளூர் மக்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த நிகழ்வு, 1970 களில் தென் கொரியாவிற்கான பிரான்ஸ் தூதர், இதனை அறிந்து வெளிப்படுத்திய போது சர்வதேச கவனத்தை பெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US