500,000 டொலர் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள்: பெப்பர் ஸ்பிரே தெளித்து கொள்ளையர்கள் கைவரிசை
அமெரிக்காவில் உரிமையாளரை தாக்கி விட்டு நகை கடையில் இருந்து சுமார் $500,000 மதிப்பிலான நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளையர்கள் கைவரிசை
அமெரிக்காவில் கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள "ஜூவல்ஸ் ஆன் லேக்" என்ற நகைக் கடையில் செவ்வாய்க்கிழமை மதியம் 1:45 மணி கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.
நகை கடை உரிமையாளரை தாக்கி அவர் மீது பெப்பர் ஸ்பிரே-வை தெளித்து நிலைகுழைய செய்துவிட்டு, சுத்தியலால் கடையின் கண்ணாடி பெட்டிகளை உடைத்து அதில் இருந்த தங்கம் மற்றும் வைரம் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்தின் மூலம் கடையில் இருந்த $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இந்த சம்பவம் குறித்து விவரித்த நகை கடை உரிமையாளர் சாம் பாபிகியன், “கடையின் முன் கதவை திறக்க சென்ற போது கொள்ளையர்கள் என்னை தாக்கி கண், தொண்டை, மூக்கு ஆகிய பகுதிகளில் பெப்பர் ஸ்பிரே அடித்தனர்.
Fox tv
அத்துடன் கடையில் இருந்த கண்ணாடி பெட்டிகளை உடைத்து நகைகளையும் கொள்ளையடித்தனர், அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் கடையில் இருந்த பெரும்பாலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு விட்டன, அது வேதனையாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அவசர பொத்தானை அழுத்தி கொள்ளை சம்பவம் குறித்து பொலிஸாருக்கு கடை உரிமையாளர் தகவலும் கொடுத்துள்ளார்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |