கொள்ளையடித்து விட்டு சாரி கேட்ட கொள்ளையன்! இன்ஸ்டா ஐடி கொடுத்து தொடர்பில் இருக்குமாறு வேண்டுகோள்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கொள்ளையன் ஒருவன் தன்னுடைய கஷ்டங்களை எடுத்து கூறி, பாதிக்கப்பட்டவரிடம் சாரி கேட்டுவிட்டு திருடிய சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாரி கேட்டுவிட்டு திருடிய கொள்ளையன்
கலிபோர்னியாவின் மன்ஹாட்டன் கடற்கரையில் மர்ம நபர் ஒருவர், அங்குள்ள ரோஸ்கிரான்ஸ் அவென்யூ வழியாக நடந்து வந்த மனிதர் ஒருவரை வழிமறித்து தன்னிடம் இருந்த துப்பாக்கியை காட்டி பணம் தரும்படி மிரட்டியுள்ளார்.
ஆனால் தன்னிடம் மொபைல் போன், மற்றும் ஏடிஎம் கார்டு ஆகிய இரண்டு மட்டுமே இருக்கிறது என்று பாதிக்கப்பட்டவர் கூற, அவரை கொள்ளையனே தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டு சென்று அருகில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு அழைத்து சென்று பணம் எடுத்து தரும்படி கூறியுள்ளான்.
அவரும் தன்னுடைய ஏடிஎம்-மில் இருந்து பணத்தை எடுத்து கொள்ளையனிடம் கொடுக்கவே, பாதிக்கப்பட்டவரை எங்கு காரில் கொள்ளையன் ஏற்றினானோ அங்கே மீண்டும் பத்திரமாக கொண்டு போய் காரில் இறக்கி விட்டுள்ளான்.
iStock
அத்துடன் தனக்கு நிறைய கட்டணங்கள் செலுத்த வேண்டி உள்ளது எனவே தான் உங்களிடம் தற்போது கொள்ளை அடிக்கிறான், என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியதோடு உங்கள் செல்போனை நாளை திருப்பி தந்துவிடுகிறேன் எனவும் கூறியுள்ளான்.
மேலும் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து இன்ஸ்டா ஐடி-யை பெற்றுக் கொண்ட கொள்ளையன், நாம் இருவரும் தொடர்பிலேயே இருப்போம் என தெரிவித்துவிட்டு கொள்ளையன் காரில் ஏறிச் சென்று விட்டதாக காவல்துறையினர் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் ஜூலை 2ம் திகதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வலைவீசி வரும் பொலிஸார்
இந்நிலையில் கொள்ளையனை கைது செய்ய பொலிஸார் தீவிரமாக வலைவீசி வருகின்றனர்.
கொள்ளையனின் அடையாளங்கள் வெளியிட்டுள்ள பொலிஸார், குற்றவாளி 20 வயதுடைய நபராக இருக்கலாம் எனவும், 5 அடி மற்றும் 8 அங்குல உயரமும், 160 பவுண்டு எடையையும் கொண்டிருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொள்ளையன் அடர் நிற செடான் காரில் இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |