காய்கறி பெட்டி என நினைத்து மனிதனை மிஷினுக்குள் திணித்த ரோபோ.., கொடூரமாக நிகழ்ந்த மரணம்
தென்கொரியாவில் காய்கறி பெட்டி என நினைத்து மனிதனை எந்திரத்துக்குள் ரோபோ அனுப்பியதால் நிகழ்ந்த மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழப்பமடைந்த ரோபோ
தென்கொரியாவில் ரோபோட்டிக் நிறுவனத்தில் 40 வயதுடைய நபர் ஒருவர் பணியாற்றி வந்தார். இவர், தெற்கு கியோங்சாங் மாகாணத்திலுள்ள விளைபொருள்கள் விநியோக மையத்திலும் பணியாற்றி வந்துள்ளார்.
Representative image
இந்த தொழிற்சாலை மையத்தில், காய்கறி பெட்டிகளை எடுத்து சீல் செய்ய அனுப்பும் பணிக்கு ரோபோக்களை பயன்படுத்தி வந்துள்ளனர். அப்போது, அங்குள்ள ரோபோ ஒன்று காய்கறி பெட்டிக்கும், மனிதனுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழப்பமடைந்துள்ளது.
உயிரிழப்பு
பின்பு, அங்கு பொருள்களை சரிபார்த்துக் கொண்டிருந்த ரோபோடிக் ஊழியரை காய்கறி பெட்டி என நினைத்து மரப்பெட்டிகளுக்கு இறுக்கமாக சீல் வைக்கும் மெஷினில் திணித்துள்ளது.
அப்போது, ரோபோவின் இறுக்கமான பிடிகளுக்கு மத்தியில் அந்த நபர் தப்பிக்க முடியாமல் இருந்துள்ளார். இதனால், ஊழியரின் தலை, முகம் மற்றும் மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
Representative image
இதனை பார்த்த ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அந்த ஊழியர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
ரோபோவின் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |