வெளிநாட்டில் அமெரிக்க ராணுவ தளம் மீது சரமாரி ரொக்கட் வீச்சு: வெளிவரும் புதிய தகவல்
வடக்கு ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள இர்பில் விமான நிலையம் மீது சரமாரி ரொக்கட் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விமான தளமானது அமெரிக்கத் தலைமையிலான கூட்டணி துருப்புக்கள் அமைந்துள்ள இராணுவ வளாகம் என தெரிய வந்துள்ளது.
இந்த இராணுவ வளாகம் மீதே முதல் ரொக்கட் தாக்கியதாக பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதல் தொடர்பில் இதுவரை உயிர்ச்சேதம் ஏதும் வெளியாகவில்லை. இராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் மேலும் இரண்டு ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உயிர் அபாயம் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை என்றாலும், சில நிமிடங்கள் வரை அப்பகுதியில் நெருப்பு கொழுந்துவிட்டெரிந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், மூன்று முறை அல்ல, 5 ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டதாக முக்கிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
விமான நிலையத்திற்கு அருகிலுள்ள அமெரிக்க இராணுவத் தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அமெரிக்க துருப்புக்கள் இந்த தாக்குதலின் இலக்காக இருந்ததா என்பது தொடர்பில் உடனடியாகத் தெரியவில்லை என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஈரான் இராணுவ தளபதி சுலைமான் கொல்லப்பட்டதன் பின்னர் ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது தொடர்ந்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.