ஈராக்கில் அமெரிக்க படைகள் இருக்கும் இராணுவத்தளம் மீது பொழிந்த ராக்கெட் மழை
ஈராக்கில் அமெரிக்க படைகள் இருக்கும் இராணுவத்தளம் மீது சரமாரி ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க மற்றும் பிற சர்வதே படைகள் இருக்கும் மேற்கு ஈராக்கின் ஜன் அல்-ஆசாத் விமானத் தளம் மீது குறைந்தது 14 ராக்கெட்டுகள் தாக்கியது என அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ராக்கெட் தாக்குதல் 3 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க தலைமையிலான சர்வதேச இராணுவ கூட்டுப்படையின் செய்தித்தொடர்பாளர் அமெரிக்க இராணுவ கேணல் Wayne Marotto, தாக்குதல் தொடர்பான தகவல்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
முதற்கட்ட அறிக்கையில், தோராயமாக. உள்ளூர் நேரம் மதியம் 12:30 மணிக்கு ஐன் அல்-அசாத் விமானத் தளம் மீது 14 ராக்கெட்டுகளால் தாக்குதல் நடத்தப்பட்டது.
ராக்கெட்டுகள் அடித்தளம் மற்றும் விமானத் தளத்தின் சுற்றப்புறத்தில் தாக்கின.
படை பாதுகாப்பு தற்காப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன. அதே நேரத்தில் முதற்கட்ட அறிக்கையில் 3 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
Images circulating reportedly show smoke rising from al-Asad air base in Iraq after a drone/rocket attack. pic.twitter.com/5itQJxOl1f
— Kyle Glen (@KyleJGlen) July 7, 2021
ராக்கெட் தாக்குதலில் இராணுவத் தளத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து மதிப்பிடப்படுகிறது என Wayne Marotto தகவல் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து தொடர்ந்து நடத்தப்படும் ராக்கெட் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவுப்பெற்ற போராளிகள் குழுக்கள் காரணம் என அமெரிக்க குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு தற்போது யாரும் பொறுப்பேற்கவில்லை.