பிரதமர் தங்கியிருந்த நகரம் மீது திடீர் ராக்கெட் தாக்குதல்! அழைத்துக்கொண்டு தெறித்து ஓடிய பாதுகாவலர்கள்: வெளியான பரபரப்பு வீடியோ
இஸ்ரேலில் பிரதமர் விஜயம் செய்த நகரம் மீது திடீரென ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காசாவிலிருந்து இஸ்ரேலை குறிவைத்து ராக்கெட் ஏவப்பட்டதாகவும், இதனைதொடர்ந்து திறந்தவெளி பகுதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
காசாவிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட் இஸ்ரேலின் Beersheba நகரில் தாக்கியதாகவும், ராக்கெட் தாக்குதல் நடந்த நேரத்தில் Beersheba நகரில் இஸ்ரேலில் பிரதமர் Benjamin Netanyahu விஜயம் மேற்கொண்டிருந்தார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராக்கெட் தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து தற்போது வரை எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.
#BREAKING: Rocket launched from Gaza towards the city of Beer Sheva, while PM Netanyahu visited the city pic.twitter.com/jLAGAeDotj
— Amichai Stein (@AmichaiStein1) March 23, 2021
ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து உணவகத்திலிருந்த பிரதமர் Benjamin Netanyahu-வை பாதுகாவலர்கள் அழைத்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
NEW - Prime Minister Netanyahu is escorted out of a restaurant after a rocket was fired at Israel.pic.twitter.com/Iqkxjftbab
— Disclose.tv ? (@disclosetv) March 23, 2021