ரோகித் நிச்சயமாக இரட்டை சதம் அடிப்பார்! சரியாக கணித்த டோனி: வைரலாகும் அந்த டுவிட்
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரோகித்சர்மா குறித்து டோனி போட்டியிருந்த டுவிட் தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்திய அணிக்கு பல சாதனைகளை கொடுத்துள்ள டோனி, திறமையான வீரர்களையும் கண்டுபிடித்து அணியில் தக்கவைத்துக் கொண்டார். அப்படிப்பட்ட ஒரு வீரர் தான் ரோகித்சர்மா, ஆரம்ப காலக்கட்டத்தில் பேட்டிங் வரிசையில் பின்னாடி விளையாடி வந்த இவருக்கு தொடர்ந்து, ஆதரவு கொடுத்து முன்னாடி இறங்கவைத்தார்.
அதன் படி இப்போது உலக அளவில் ஒரு சிறந்த ஒப்பனராக ரோகித்சர்மா உள்ளார். இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித்சர்மா 250 ஓட்டங்களுக்கு மேல் குவித்தார்.
இதை டோனி முன்கூட்டியே கணித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது அந்த் டுவிட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்போட்டியில் ரோகித்சர்மா, 250 ஓட்டங்களை கடந்து 264 ஓட்டங்கள் எடுத்து உலக சாதனை படைத்தார்.
If Rohit doesn't get out he will certainly get 250 today
— Mahendra Singh Dhoni (@msdhoni) November 13, 2014
மொத்தம் 173 பந்துகளை சந்தித்த ரோகித்சர்மா 33 பவுண்டரி மற்றும் 9 சிக்சர்களுடன் 264 ரன்கள் அடிக்க இந்திய அணி 404 ஓட்டங்கள் குவித்தது.
அதன்பிறகு இந்த மெகா இலக்கை துரத்திய இந்திய இலங்கை அணி 251 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.