'என் தூக்கத்தை கெடுத்த ஒரே கேப்டன் இவர் மட்டும் தான்' கவுதம் கம்பீர் புகழாரம்
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தான் நான் பார்த்த சிறந்த கேப்டனாக தெரிகிறார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி மிக சிறப்பாக விளையாடி வருகிறது.
இந்த நிலையில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரில் இந்தியா முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரோகித் கேப்டன்ஷி
இந்திய அணியை தோனிக்கு பின்பு விராட் கோலி கேப்டனாக வழி நடத்தி வந்தார். விராட் கோலி தனது கேப்டன் பதவியை துறந்த பிறகு இக்கட்டான சூழலில் ரோகித் சர்மா தலைமையேற்றார்.
இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் கேப்டன்சி இரண்டுக்கும் பெரியதாக வித்தியாசம் இல்லை எனவும், ஐபிஎல்-லில் எனது தூக்கத்தை கெடுத்த ஒரே கேப்டன் ரோஹித் சர்மா மட்டும் தான், மற்ற யாருக்காவும் அதிகம் சிந்திக்கவும், திட்டங்களை வகுக்கவும் மாட்டேன் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
சிறந்த கேப்டனாக ரோகித் திகழ்வார் என குறிப்பிட்ட கவுதம் கம்பீர், அயல் நாடுகளில் இன்னும் சிறப்பாக கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Bcci
ரோகித் சர்மாவிற்கு சவால்
அவுஸ்திரேலியாவுடனான 3 வது டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் டெஸ்ட் உலகக் கோப்பை இறுதி சுற்றுக்கு தயாராகிவிடும்.
இறுதிப் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே ரோகித் சர்மா தன் அணியை திறமையாக வழி நடத்தி டெஸ்ட் உலகக் கோப்பையை வென்று தருவாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.