Wow... 5 கிலோ எடை குறைத்து கெத்து காட்டிய ரோஹித்: விமர்சித்தவர்களுக்கு நெத்தியடி
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் உடல் பருமனைப் பார்த்து பலர் கிண்டலடித்த நிலையில், 5 கிலோ வரை உடல் எடையை குறைத்து மாஸ் காட்டியுள்ள ரோஹித் சர்மாவின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரோஹித்தை கிண்டிலடித்த நெட்டிசன்கள்
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா உடல் எடை அதிகமாக இருந்தாலும் துடுப்பாட்டத்தில் பட்டையை கிளப்புவார்.
ஆனால், சமீப காலங்களாக தன்னுடைய விளையாட்டில் அவர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் பலரது விமர்சனங்களை பெற்று வருகிறார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான்களான கபில்தேவ், சுனில் கவாஸ்கர் போன்றோர் கூட ரோஹித் சர்மாவின் உடல் தகுதியை குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.
அவருடைய தொடர் சொதப்பல்களுக்கு அவரது உடல் எடை கூட காரணமாக இருக்கலாம் என்றும், சிலர் இவரு ஒரு வட பாவ்... என்று கிண்டலடித்து கமெண்ட் செய்திருந்தனர்.
இதற்கிடையில், உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்குப் பிறகு விடுமுறையை கழிப்பதற்காக ரோஹித் சர்மா தன் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு சென்றார். ஓய்வு நேரத்திலும் உடற்பயிற்சியை மேற்கொண்டு உடல் எடை குறைப்பதில் தீவிரம் காட்டி வந்தார்.
5 கிலோ உடல் எடை குறைத்த ரோஹித்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெற்றுள்ள ரோஹித் சர்மா 5 கிலோ வரை உடல் எடை குறைத்து மாஸ் காட்டியுள்ளார். தாடியையும் ட்ரிம் செய்து பார்ப்பதற்கு ரொம்ப ஃபிட்டாக இருக்கிறார்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாவ்.. மாஸ் என்ட்ரி... என்று பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம் -
Rohit Sharma's smile can lift me out of even the darkest mood. pic.twitter.com/0qVZuN1yHV
— Aru? (@Aru_Ro45) July 11, 2023
Rohit Sharma’s this Cutest Smile ?❤️?? pic.twitter.com/0OUeNQlIry
— Tanay Vasu (@tanayvasu) July 11, 2023
Rohit sharma is ready for the West Indies series pic.twitter.com/868sMf40yi
— Ansh Shah (@asmemesss) July 11, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |