நீங்கள் தவறு செய்து விட்டீர்கள்? கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கங்குலி கடும் விமர்சனம்
நீங்கள் தவறு செய்து விட்டீர்கள் என்று இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மாவை இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியா வெற்றி பெறுமா?
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை டெஸ்ட் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதலில் களத்தில் இறங்கிய அவுஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 469 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனையடுத்து 470 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் மைதானத்தில் இறங்கிய இந்திய கிரிக்கெட் அணி தன் முதல் இன்னிங்ஸில் 2ம் நாள் முடிவில் 151 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து, இந்தியா வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.
கடுமையாக விமர்சனம் செய்த கங்குலி
மைதானத்தில் இந்திய அணி உமேஷ் யாதவையும், அஸ்வினை வெளியே உட்கார வைத்தது கேப்டன் ரோகித் சர்மா எடுத்த தவறான முடிவாக பார்க்கப்படுகிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் அஸ்வினை அணியில் சேர்க்காததற்கு கேப்டன் ரோகித் சர்மாவை, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் கங்குலி பேசுகையில், யார் சொன்னது ஆடுகளத்தில் ஆஃப் ஸ்பின்னர் விளையாட முடியாது என்று. அஸ்வின் போன்ற மேட்ச் வின்னரை அணியில் சேர்க்காதது இந்திய கிரிக்கெட் அணி தவறு செய்துள்ளது என்றார்.