மனைவிக்காக உடனே கடலில் குதித்த ரோஹித் சர்மா - நடந்தது என்ன?
மனைவிக்காக உடனே கடலில் குதித்த ரோஹித் சர்மாவின் நெகிழ்ச்சிப் பதிவு சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடலில் குதித்த ரோஹித் சர்மா
சமீபத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து, இந்திய அணி கேப்டனான ரோஹித் சர்மாவை சமூகவலைத்தளங்களில் பலர் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இவரை விட விராட் கோலியின் தலைமையே எவ்வளவோ மேல் என்றும், இவர் உடனடியாக பதவியை விட்டு விலக வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இப்படி பெரிய விமர்சனங்கள் சென்றுக்கொண்டிருக்கையில், தன் குடும்பத்துடன் ரோஹித் சர்மா ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.
இந்நிலையில், ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தேவ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவை வெளியிட்டிருந்தார். அதில், நானும், என் மகள் சமைராவும் கடலில் படகு சவாரி செய்தோம். அப்போது, கடலில் என் செல்போன் கடலில் விழுந்துவிட்டது.
இதைப் பார்த்த உடனே ரோஹித் கடலில் குதித்து என் செல்போனை மீட்டு கொடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் தன் மனைவிக்காக ரோஹித் கொஞ்சமும் யோசிக்காமல் கடலில் குதித்து விட்டாரே என்று பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
Rohit Sharma's wife reveals her phone fell in the sea and he jumped in to save it.
— ????????? (@Suvhu0854) June 16, 2023
Rohit Clutch Sharma ? pic.twitter.com/LG3niKNqHy
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |