ஜாம்பவானின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியின் சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்தார்.
ரோஹித் ஷர்மா
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா துடுப்பாட்டம் செய்து வருகிறது. 
இந்தப் போட்டியில் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) இரண்டு கேட்சுகள் செய்தார். இதன்மூலம் அவர் 100 கேட்சுகள் செய்த இந்திய வீரர்களின் பட்டியலில் இணைந்தார்.
அத்துடன் 99 கேட்சுகளுடன் 6வது இடத்தில் சவுரவ் கங்குலியை (308 போட்டிகள்) பின்னுக்குத் தள்ளி, 276 போட்டிகளிலேயே 100 கேட்சுகள் என்ற சாதனையை படைத்தார்.
ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்சுகள் செய்தவர்கள் பட்டியலில் விராட் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார். 
அதிக கேட்சுகள் செய்த இந்திய வீரர்கள்
- விராட் கோஹ்லி - 305 போட்டிகளில் 164 கேட்சுகள்
- முகமது அசாருதீன் - 334 போட்டிகளில் 156 கேட்சுகள்
- சச்சின் டெண்டுல்கர் - 463 போட்டிகளில் 140 கேட்சுகள்
- ராகுல் டிராவிட் - 340 போட்டிகளில் 124 கேட்சுகள்
- சுரேஷ் ரெய்னா - 226 போட்டிகளில் 102 கேட்சுகள்
- ரோஹித் ஷர்மா - 276 போட்டிகளில் 100 கேட்சுகள்
Milestone unlocked 🔓
— BCCI (@BCCI) October 25, 2025
Rohit Sharma completes his 100th catch in ODIs 🙌#TeamIndia | @ImRo45 pic.twitter.com/OORJncEFJI
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |